அவர ஓகே பண்ணாங்க… நான் மட்டும் இளிச்சவாயனா? இயக்குனரிடம் மல்லுக்கு நின்ற ரஜினி! ஓட்டம் பிடித்த இயக்குனர்!

by Akhilan |   ( Updated:2023-09-13 06:57:33  )
அவர ஓகே பண்ணாங்க… நான் மட்டும் இளிச்சவாயனா? இயக்குனரிடம் மல்லுக்கு நின்ற ரஜினி! ஓட்டம் பிடித்த இயக்குனர்!
X

Rajinikanth: ரஜினிகாந்த் எப்போதுமே கதையில் தலையிடவே மாட்டார். ஆனால் அவரே ஒரு இயக்குனரிடம் சண்டைக்கு நின்று பிரச்னை பெரிசாகி அந்த இயக்குனர் இந்த படமே வேண்டாம் எனக் கிளம்பி சென்ற தகவலும் நடந்து இருக்கிறது. அதுகுறித்த சுவாரஸ்ய தகவலும் வெளிவந்துள்ளது.

தவறான பழக்கத்தால் குடும்பமே ஒதுக்கி வைக்கின்றனர். இதனால் மனமுடைந்த ரஜினிகாந்த் தற்கொலை செய்து கொள்ளலாம் என நினைக்கிறார். அப்போது தன் நண்பனை பார்க்க செல்லும் போது அவர் வரைந்த ராகவேந்திரர் ஓவியம் அவர் மனதை மாற்றுகிறது.

இதையும் படிங்க: ‘விடாமுயற்சி’யை மெகா ஹிட்டாக்க அஜித்துடன் கூட்டணி அமைக்கும் பிரபலம்!.. தரமான சம்பவம் இருக்கு!..

குண்டான தேகம், ஒளிவீசும் கண்கள் என அவரை பார்க்கும் போது அசந்து விடுகிறார். ஒரு நாள் முழுதும் தியானம் இருந்தால் கிடைக்கும் நிம்மதியை போல மனசு லேசாகி விடுகிறதாம். அன்றில் இருந்து ராகவேந்திரரை மனதில் வைத்தே வழிப்பட தொடங்கிகிறார்.

ஒருநாள் ராகவேந்திரர் வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என ரஜினிகாந்த் ரொம்பவே ஆசைப்படுகிறார். இதை தன்னுடைய சக திரை நண்பர்களிடம் சொன்ன போது ஏன் உங்களுக்கு இந்த வேலை. இப்போது தான் வளர்ந்து இருக்கீங்க எனக் கூறி இருக்கின்றனர்.

இதையும் படிங்க: ரஜினி, விஜய், அஜித் கிட்ட இல்லாத பணமா!.. மக்கள் கிட்ட இன்னும் எவ்ளோதான் சுரண்டுவீங்க!.. நியாயமா விஷால்?..

நான் மகான் அல்ல, ரங்கா போன்ற ரவுடி படத்தில் நடித்த உங்களை ராகவேந்திரராக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்கின்றனர். இந்நிலையில் ரஜினியின் ஆஸ்தான இயக்குனர் கலைஞானத்துக்கு இந்த விஷயம் தெரிய வருகிறது. அவரும் நானே இயக்குகிறேன் என வருகிறார்.

ஆனால் ராகவேந்திரர் குண்டான தேகம் கொண்டவர். நீங்களோ ஒல்லியாக இருக்கீங்களே எனக் கூறுகின்றார். கன்னடத்தில் ராஜ்குமார் நடித்தார். அவரும் ஒல்லியாக தானே இருந்தார் என சண்டை இருவருக்கும் முற்றுகிறது. ஒரு கட்டத்தில் அவர் தன்னால் இயக்கவே முடியாது எனக் கிளம்பியே விட்டாராம்.

Next Story