Cinema News
நடிகர் சங்கத்துக்கு கேப்டன் பெயரை வைக்க மாட்டாங்க!. எல்லாமே நடிப்பு.. பொங்கும் பிரபலம்..
Vijayakanth: நடிகர் விஜயகாந்தின் இறப்புக்கு எதுவுமே செய்யாத நடிகர் சங்கம் ஒரு வழியாக நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி விட்டது. அதுவும் கூட கடமைக்காக செய்த மாதிரியே இருந்தது. இன்னமும் அவர்கள் செய்த பித்தலாட்டங்கள் நிறைய என பிரபல திரை விமர்சகர் அந்தணன் தன்னுடைய வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.
விஜயகாந்த் இறந்து 2 வாரங்களுக்கும் மேலான நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை நடத்திவிட்டது. அதுவும் கூட பெரிய நிகழ்ச்சியாக இல்லை. ரொம்பவே சிம்பிளாக தான் இருந்தது. அதிலும் முக்கிய நடிகர்கள் யாருமே இல்லை. கமல், விக்ரமை தவிர மாபெரும் ஸ்டார்களும் அங்கு வரவே இல்லை.
இதையும் படிங்க: விஜய் படத்துலயே கேமியோவா நடிக்க வரல!.. விஜயகாந்த் மகன் படத்துல நடிப்பாரா விஷால்?..
விஜய் கூட இறப்புக்கு வந்தார். ஆனால் அஜித் அங்கும் வரவில்லை. இங்கும் வரவில்லை. தனுஷ் ஹைதராபாத்தில் இருக்காரு. நினைத்தால் வந்து இருக்கலாம். சிம்புவும் சரி சிவகார்த்திகேயனும் சரி வராமல் நிகழ்ச்சியை தவிர்த்தது சரிதானா? தென்னிந்திய நடிகர் சங்கம் சாட்டையை சுழற்றி இருக்க வேண்டும். வராமல் இருக்க கூடாது என அவர்கள் கறாராக பேசி இருக்க வேண்டும். எத்தனை கலைஞர்கள் அங்கு இருந்தனர்.
விஜயகாந்துக்கு பொருந்துவது போல ஒரு ஆன்த்தம் பாடலை கூட அவர்களால் உருவாக்க முடியவே இல்லை. அது உங்களுக்கு அவமானம் தானே. இன்னைக்கு நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயரை வைக்க வேண்டும் என்றனர். ஆனால் அது நடக்கும் எனக் கூட அவர்கள் கூறவில்லை. யோசித்து முடிவெடுக்கப்படும் என்றே சொல்லினர். அவர்கள் அப்படி எல்லாம் எளிதாக வைத்து விடமாட்டார்கள்.
இதையும் படிங்க: எவன்டா அடிச்சது!… ராதாரவியும், வாகை சந்திரசேகரும் விஜயகாந்துக்காக செய்த தரமான சம்பவம்!…
ஒரு ப்ளாக்குக்கு வேண்டும் என்றால் வைக்கலாம். முடிவெடுக்கப்படும் என்ற போதே தெரியவேண்டாமா? அதுமட்டும் இல்லாமல், இப்போது மக்கள் இந்த விஷயத்தினை பேசிக்கொண்டு இருப்பதால் இப்படி சொல்கிறார்கள். ஆனால் இன்னும் கொஞ்ச நாள் கழித்து மக்களும் மறந்துவிடுவார்கள். அவர்களும் மறந்துவிடுவார்கள் எனவும் காட்டமாக தெரிவித்து இருக்கிறார்.