காலா படத்த பிளான் போட்டு காலி பண்ணாங்க!.. புலம்பும் பா.ரஞ்சித்.. இவ்ளோ நடந்திருக்கா?!..
Rajinikanth: ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தினை திட்டமிட்டே தோல்வி அடைய வைத்ததாக படத்தின் இயக்குனர் பா ரஞ்சித் தற்போது தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிப்பில் பா ரஞ்சித் எழுதி இயக்கிய திரைப்படம் காலா. இப்படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரி ராவ், நானா பட்டேகர், ஹுமா குரேஷி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சந்தோஷநாராயணன் இப்படத்திற்கு இசையமைப்பு செய்திருந்தார்.
இதையும் படிங்க: பா.ரஞ்சித்தின் அடுத்த வில்லன் ஆர்யாவே.. ஆனா ஹீரோ யாரு தெரியுமா?
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அறிவிக்கப்பட்ட காலா திரைப்படம் 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திரைக்கு வந்தது. ரஜினிகாந்த் நடிப்பு, ஆக்சன் காட்சிகள் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் திரைக்கதை பெரிய அளவில் விமர்சனத்திற்கு உள்ளானது.
பாக்ஸ் ஆபிஸில் 160 கோடி வசூல் செய்த படம் ரஜினிகாந்த் கேரியரில் சுமார் ரகம் என்று கூறப்படுகிறது. இது குறித்து பா ரஞ்சித்திடம் சமீபத்திய பேட்டி ஒன்றில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர், ரஜினிகாந்த் நடிப்பில் கபாலி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இதையும் படிங்க: கோட் ஆடியோ லான்ச் இருக்கா?!.. விஜய் எடுத்த முடிவு சரியா?!.. அவ்ளோ பயமா?!…
அதைத் தொடர்ந்து வெளியான காலா திரைப்படம் தோல்வி படம் எனக் கூற முடியாது. அதை திட்டமிட்டு தோல்வி படமாக மாற்றினார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதை பற்றி தற்போது பேச இயலாது. ஆனாலும் படத்தை தோல்வி அடைய செய்ய திட்டமிட்டே காய் நகர்த்தி அதை செய்து முடித்தனர். காலா திரைப்படம் ரசிகர்களுக்கு முழு திருப்தி படமாக அமைந்தது என என்னால் சொல்ல முடியாது.
அதில் சில குறைகள் இருந்தது தான். ஆனால் அப்படம் மொத்தமாக நிராகரிக்க வேண்டிய படம் என கேட்டால் கண்டிப்பாக இல்லை. அப்படத்தில் ரசிக்கும் படியான நிறைய விஷயங்கள் இருந்தது. கொண்டாடப்பட வேண்டிய காட்சிகளும் அமைந்திருந்தது. ஆனால் சில காட்சிகளை மட்டும் வைத்து மொத்தமாக படத்தை முடிவெடுத்தது ஏற்க முடியாத விஷயம் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.