எங்களை அழிக்க பல பெரிய சக்திகள் நினைக்குது – அனிதா குப்புசாமி தம்பதி ஓபன் டாக்

Published on: June 6, 2023
---Advertisement---

நாட்டுப்புற இசையில் அனிதா – குப்புசாமி, புகழ் பெற்றவர்கள். இசை தம்பதியான இவர்கள் பாட்டுத்துறையில், ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்கள். இசை குறித்து கற்பித்த ஆசிரியா் குப்புசாமியிடம், பாடம் கற்றுக்கொள்ள மாணவியாக வந்த அனிதா, அவரது இசைப்புலமையை பார்த்து தன் மனதை பறிகொடுத்து, இருவரும் காதல் மணம் புரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சொல்ல மறந்த கதை படத்தில், சேரனின் நண்பனாக நடித்திருப்பார் குப்புசாமி.

அனிதா குப்புசாமி
Anitha kuppusamy

சமூக வலைதளங்களில் அனிதா குப்புசாமி

யூ டியூப்பராக உள்ள அனிதா குப்புசாமி தனது வீடியோ பதிவுகளில் சமையல் குறிப்புகளை, பொதுவான விஷயங்களை மக்களுக்கு சொல்லி வருகிறார். தங்களது வீட்டில் மாடி தோட்டம் அமைத்துள்ள அனிதா குப்புசாமி அது குறித்தும் பயனுள்ள பல தகவல்களை மக்களுக்கு கூறி வருகின்றனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களில் சப்ஸ்கிரைப்பர்களாகவும் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில், தங்களை அழிக்க பல பெரிய சக்திகள் நினைப்பதாக இருவரும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளனர்.

எங்களை அழிக்க நினைக்கின்றனர்

எங்களை ஒடுக்க வேண்டும், அழிக்க வேண்டும் என நிறைய பெரிய சக்திகள் நினைக்குது. நாங்கள் சுயம்புவாக வளர்ந்தவர்கள் யாரிடமும் கையேந்தியது இல்லை. எங்களிடம் வித்வ கர்வம் இருக்கிறது. அதனால் யாரிடமும் குனிந்து போவது, பணிந்து போவது, நெளிவு சுழிவுடன் நடந்துகொள்வது, குறிப்பாக அட்ஜஸ்ட்மெண்ட் செய்துகொள்வது என்பது எங்களிடம் கிடையாது. யாரிடமும் எதற்காகவும் போய் நின்றதில்லை.

அனிதா குப்புசாமி
Anitha kuppusamy

40 ஆண்டுகளாக மேடை கச்சேரி

திருமணமாகி 33 ஆண்டுகளாக இவருடன் நான் மேடை கச்சேரிகளில் பாடிக்கொண்டு இருக்கிறேன். அதற்கு முன்பு 40 ஆண்டுகளாக மேடைகளில் அவர் பாடிக்கொண்டு இருக்கிறார். இசைப்பாட்டு துறையில் எங்கள் புகழ் சிறிதும் மங்கவில்லை. புகழ் குறையவில்லை. வெவ்வேறு விதமாக, எங்களுக்கான புகழ் கிடைத்துக்கொண்டே தான் இருக்கிறது. எங்கள் புகழை கெடுக்க, நிறைய கட்டுக்கதைகளை சிலர் சொன்னாலும், எங்களது புகழ் சிறிது கூட குறையவில்லை என்று, அனிதா குப்புசாமி கூறி இருக்கின்றனர்.

elango

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.