கோட் படத்துக்கு முன்னாடியே அந்தகன் ரிலீஸ் ஆனதுல தியாகராஜனோட மாஸ்டர் பிளான்..! பலே பலே பலே...!
அந்தகன் படத்தின் ரிலீஸ், விமர்சனம், அதற்குக் கிடைத்த ரசிகர்களின் வரவேற்பு குறித்த செய்தி தான் இன்று சமூகவலை தளங்களில் செய்திகள் ஹவுஸ்புல்லாக வந்து கொண்டுள்ளன. அந்த வகையில் டாப்ஸ்டார் பிரசாந்த் மிகப் பெரிய கம்பேக் கொடுத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
இந்தியில் இருந்து ரீமேக் ஆகி தமிழுக்கு வந்தாலும் எந்த இடத்திலும் கொஞ்சம் கூட அந்த தடயம் தெரியவில்லை. அதே போல கதாநாயகியாக நடித்த பிரியா ஆனந்த் கூட கவர்ச்சியாகக் காட்டாமல் அழகான மாடர்ன் லுக்கில் ரசிக்க வைத்திருப்பார் இயக்குனர் தியாகராஜன்.
இந்தப் படத்தில் அவர் கொடுத்த வெற்றியைத் தொடர்ந்து பிரசாந்த் இன்னும் அடுத்தடுத்து வேற இயக்குனர்களின் படங்களிலும் நடித்து கிடைத்த வரவேற்பைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கோட் படம் விஜய் நடிப்பில் வருவதால் அந்தப் படத்திற்கு மினிமம் கியாரண்டி உள்ளது.
இந்தப் படத்தில் நாலு பேர்களில் ஒருவராக பிரசாந்த் நடித்துள்ளார். இவருக்கு என்ன ரோல் என்பது தெரியாது. ஆனால் முக்கியமான ரோலாகத் தான் இருக்கும். கதையே அவரைச் சுற்றி நகர்வதாகத் தான் இருக்கும். அல்லது படத்தில் அவர் வில்லனாக நடித்திருப்பார்.
அந்த வகையில் இந்தப் படம் ரிலீஸ்சுக்குப் பிறகு அந்தகன் படத்தை வெளியிட்டால் இப்போ கிடைத்த வரவேற்பை விட அதிகமாக கிடைத்திருக்கலாம். ஆனால் தியாகராஜன் ஏன் படத்தை முன்பே ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கேள்வி எழுகிறது. ஒரு மாஸ் படத்தில் அதுவும் பிரசாந்தின் ரோல் கவனிக்கப்படும் வகையில் இருக்கும்போது அந்தகன் படத்துக்கு இன்னும் கூடுதல் எதிர்பார்ப்பு வரும் என்பது உண்மை தான்.
ஆனால் கோட் படத்தில் அவர் வில்லனாக நடித்திருந்தால் ரசிகர்கள் அவரை அடுத்த படத்தில் ஹீரோ ரோலில் ஏற்பார்களா என்று ஒரு சிந்தனை எழுந்;திருக்கலாம். அது மட்டுமல்லாமல் கோட் படத்தின் வெற்றியால் தான் அந்தகன் படம் ஓடுகிறது என்றும் சொல்லிவிடலாம். ஆனால் தியாகராஜனைப் பொருத்தவரை அந்தகன் படத்தின் திரைக்கதையை நம்பித் தான் முன்பே ரிலீஸ் செய்துள்ளார்.
அதனால் தான் முதலிலேயே தனது படத்தைக் களத்தில் இறக்கியுள்ளார் என்றே தெரிகிறது. பிரசாந்துக்கு இன்னும் நிறைய ரசிகர்கள் இருக்காங்க என்பதைக் காட்ட வேண்டும் என்று ஒரு ஈகோ கூட அவருக்கு இருந்து இருக்கலாம். அதனாலும் படத்தை முன்பே ரிலீஸ் செய்து இருக்கலாம். எப்படி இருந்தாலும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை ரொம்பவே பூர்த்தி செய்துள்ளார் தியாகராஜன்.
பிரசாந்த், சிம்ரன் ஜோடியைப் பொருத்த வரை ஜோடி, கண்ணெதிரே தோன்றினாள், பார்த்தேன் ரசித்தேன், தமிழ் ஆகிய படங்கள்; மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் அந்தகன் படமும் இடம்பெறுகிறது.