திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் கமல் நடித்த குணா படம் குறித்து பல தகவல்களைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்ப்போமா…
33 ஆண்டுகளுக்குப் பிறகு
கடந்த நவம்பர் 29ம் தேதி குணா படம் ரீ ரிலீஸ் ஆனது. இந்தப் படத்தைப் பார்த்து மஞ்சுமல் பாய்ஸ் எடுத்து அது வசூலை அள்ளி விட்டது. கண்மணி அன்போடு என்ற ஒரு பாடல் போதும். அதையே அவர்கள் பயன்படுத்தி வெற்றி பெற்றார்கள்.
அந்த வகையில் 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. 4கே பார்மட்ல வந்து இந்தப் படம் இப்ப உள்ள தலைமுறைகளும் விரும்பும் வகையில் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது.
குணா உருவானது எப்படி
கமல் சாருக்கு எப்பவுமே ஒரு பழக்கம் உண்டு. இன்னொருவர் சொல்லி மட்டும் அவர் கேட்பதில்லை. அவருக்குள் ஒரு உள்ளுணர்வு இருக்கும். அதன்படி தான் செய்வார். கமல் அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் என ஹிட் கொடுத்த நேரம். அவர் அப்போது சொந்தப் படம் எடுத்து இருந்தால் கூட பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கும். ஆனால் நம்ம கூட வேலை பார்த்த மேனேஜர் டி.என்.சுப்பிரமணியத்துக்காக ஒரு படம் எடுக்கணும்னு நினைத்தார். அப்படி உருவானது தான் குணா படம்.
கொடைக்கானலில் செட்
Also read: சினிமா உலகில் யாருமே செய்யாத விஷயம்… தன்னலம் கருதாமல் செய்த நெப்போலியன்
குணா படத்துக்கு சாப்ஜான் என்ற மலையாள எழுத்தாளர் திரைக்கதை எழுதினார். சிபிமலயில் டைரக்டராக வந்தார். அப்புறம் அவர் திடீர்னு விலகிட்டார். ஆனால் பட வேலைகள் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது. கொடைக்கானலில் செட் வேலைகள் குறித்து விவாதம் நடக்கிறது. ஆர்ட் டைரக்டர் மகி ரொம்ப நல்லா சர்ச் செட் எல்லாம் கொடைக்கானலில் போட்டு அசத்தினார்.
நானும் ஒரு பெண்
அதன்பிறகு சந்தானபாரதி வந்து படத்தில் ஐக்கியமாகி டைரக்டர் ஆனார். கமல் என்ன நினைக்கிறாரோ அதைச் செய்வார். 40 நாள் கொடைக்கானல், 35 நாள் ஐதராபாத் என சூட்டிங் நடந்தது. ஏவிஎம்மின் ‘நானும் ஒரு பெண்’ படத்தில் விஜயகுமாரி தன்னைக் கருப்பாக்கிக் கொண்டு நடித்தார். ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கம்.
கருப்பா இருக்குற பெண் கல்யாணம் பண்ணிக்கிட்டு எவ்வளவு சிக்கலுக்கு ஆளாகிறார் என்பதே அதன் கதை. அந்தப் படத்தில் ரிஸ்க் எடுத்து நடித்தார் விஜயகுமாரி. படம் சக்சஸ் ஆனது. தன்னோட உடல் அழகைக் குறைத்துக் கொண்டு நடித்தது தமிழ்த்திரை உலகில் முதல் பெண் என்றால் அவர் தான்.
தன்னைக் கருப்பாக்கிய கமல்
அதன்பிறகு கமல் தான் தன்னைக் கருப்பாக்கிக் கொண்டு இரண்டாவதாக நடித்தார். அதன்பிறகு பலரும் கேரக்டர்களுக்காக தன் உருவத்தையே இமேஜ் பற்றிக் கவலைப்படாமல் மாற்றிக் கொண்டு நடித்தனர். மனப்பிறழ்வு உள்ள ஒருவன் நியாயமாக இருக்கிறான். எல்லாருக்கும் நல்லவனாக இருக்கிறான். தான் நினைத்த பெண்ணுக்கு வாழ்க்கைத் தரணும்னு நினைக்கிறான்.
படம் சொல்லும் சேதி
அதனால் ஏற்படும் சிக்கல்களைத் தான் படம் சொல்லுது. ஒரு குடும்பத்தில் தந்தைக்கும், தாய்க்கும் சண்டை நடந்து கொண்டே இருக்கிறது. குடும்பத்தில் நிம்மதி இல்லை. அவர்களுக்குப் பிறக்கும் மகனோ அதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய் தனக்கு வரும் பெண்ணைத் தான் எவ்வளவு சந்தோஷமாக வைத்துக் கொள்வான், உள்ளங்கையில் தாங்கிப் பிடிப்பான் என்பது தான் இந்தப் படம் சொல்லும் முக்கியமான சேதி.
நல்லவனுக்குக் காலமில்லை
Also read: அடுத்த படத்துக்கு வேறலெவல் ஸ்கெட்ச் போட்ட அட்லீ!.. பட்ஜெட் எவ்வளவு கோடி தெரியுமா?…
விபசாரம் செய்யும் இடத்தில் பிறக்கிற அவர் அபிராமி என்ற பெண்ணை திருமணம் செய்யும் எண்ணத்துடன் வெளியே வருகிறார். அதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது புற உலகம் அவரை இம்சைப்படுத்துகிறது. அதிலிருந்து அவர் மீண்டாரா என்பதே கதை. நல்லவனுக்குக் காலமில்லை. ஆனால் பலரும் சந்தர்ப்பவாதியாக சூழலுக்கேற்ப நடிக்கிறார்கள் என்பதையே படம் தோலுரித்துக் காட்டுகிறது.
ஆறு ஆண்டுகளுக்கு…
ஊதாரி என்ற…
நான் சினிமாவில்…
Sivakarthikeyan: கடந்த…
Vignesh Shivan:…