சில்க் ஸ்மிதாவுடன் அப்படியொரு உறவு.. அந்த படத்தில் டார் டாராக கிழித்து தொங்கப் போட்டதே ரஜினியை தானாம்!

80களில் நடிகை சில்க் ஸ்மிதா இல்லாத படங்களே என்று சொல்லலாம் என்கிற அளவுக்கு அவரது புகழ் ஓங்கி இருந்தது. கவர்ச்சி நடிகையாகவும் ஐட்டம் பாடல்களுக்கு நடனம் ஆடுபவராகவும் இருந்த சில்க் ஸ்மிதா தனது வசீகரத்தால் ஹீரோயின்களையே பின்னுக்குத் தள்ளி ரசிகர்கள் மனங்களில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்துக்கும் சில்க் ஸ்மிதாவுக்கும் ரகசிய உறவு இருந்ததை 12 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்தி படமான டர்ட்டி பிக்சரிலேயே அம்பலப்படுத்தி நடிகர் ரஜினிகாந்தின் முகத்திரையை பாலிவுட் இயக்குநர் மிலன் லுத்ரியா கிழித்து தொடங்க விட்டு விட்டார் என திரைக்கூத்து யூடியூப் சேனல் மூலம் நடிகர்களின் அந்தரங்க வாழ்க்கை பற்றி பேசி வரும் வித்தகன் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கூறியுள்ளார்.
டர்ட்டி பிக்சர் படத்தில்:
ஜெயிலர் படத்தின் முதல் சிங்கிள் காவாலா பாடல் வெளியான நிலையில், தமன்னாவுடன் 72 வயதில் தலைவருக்கு ஐட்டம் டான்ஸ் தேவையா என ரசிகர்கள் கேட்டு வர, அந்த காலத்திலேயே ஏகப்பட்ட மன்மத லீலைகளை ரஜினிகாந்த் நடத்தி உள்ளார் என வித்தகன் பேசி உள்ளார்.
வயதான நடிகருடன் இளம் நடிகை சில்க் ஸ்மிதா நடிப்பது போலவும், பாலிவுட்டின் மூத்த நடிகர் நசிருதின் ஷா நடித்த கதாபாத்திரத்திற்கு சூர்யகாந்த் என துணிச்சலாக பெயர் வைத்தே சூப்பர் ஸ்டாரைத் தான் குறிப்பிட்டுள்ளனர் என பேசிய வீடியோ ரஜினிகாந்த் ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.
ரஜினிகாந்த் சில்க் ஸ்மிதா உறவு:
அந்த படம் வெளியான சமயத்திலும் ரஜினிகாந்தும் சில்க் ஸ்மிதாவும் ரகசிய உறவில் வாழ்ந்து வந்தனர் என ஏகப்பட்ட சர்ச்சைகள் கிளம்பியதாகவும் வித்தகன் தெரிவித்துள்ளார்.
நடிகர் வினு சக்கரவர்த்தி தான் வண்டிச் சக்கரம் படத்தின் மூலம் சில்க் ஸ்மிதாவை சினிமாவில் அறிமுகப்படுத்தினார் என்றும் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என இந்தியா முழுவதும் பிசியான கவர்ச்சி நடிகையாக நடித்து வந்த சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களும், சூர்யகாந்த் வீட்டில் சில்க் ஸ்மிதா படுக்கையறையில் இருந்த போது சூர்யகாந்தின் மனைவி வர, அவரை அங்கிருந்து துரத்தியடித்த காட்சிகளையும் எல்லாம் இயக்குநர் வைத்து பெரிய சம்பவமே செய்திருப்பார் என்றும் பேசி வித்தகன் தற்போது விவகாரத்தை கூட்டியுள்ளார்.