Cinema History
எம்.ஜி.ஆரிடம் சம்பளம் வாங்கியவர் அவருக்கே முதலாளி ஆன கதை!.. இது செம மேட்டர்!…
ஏழு வயதில் நாடகத்தில் நடிக்க துவங்கி 30 வருடங்களில் பல நாடக கம்பெனிகளிலும் நடித்து வந்தார் எம்.ஜி.ஆர். 37வது வயதில் சினிமாவில் நுழைந்து 10 வருடங்கள் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர்.
துவக்கத்தில் அவர் நடித்தது எல்லாமே ராஜா, ராணி கதையை கொண்ட சரித்திர படங்கள்தான். மன்னாதி மன்னன், மருதநாட்டு இளவரசி, நாடோடி மன்னன், மதுரை வீரன், மந்திர குமாரி என எம்.ஜி.ஆர் நடித்த படங்கள் ரசிகர்களிடம் அவரை பிரபலமாக்கியது. அதேநேரம், எம்.ஜி.ஆரின் படங்கள் சென்னை போன்ற பெரு நகரங்களில் பெரிய வசூலை பெறவில்லை.
இதையும் படிங்க: இப்படிப்பட்டவரா எம்.ஜி.ஆர்?!.. சோ-வை மிரள வைத்த இரண்டு விஷயங்கள்!.. அட செமயா இருக்கே!..
ஆனால், கிராமப்புறங்களில் எம்.ஜி.ஆர் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. எனவே, சிட்டியில் எம்.ஜி.ஆர் படங்கள் ஓடாது. மேலும், அவர் ராஜா ராணி கதைகளுக்கு மட்டுமே செட் ஆவார் என திரையுலகம் பேசியது. இதை உடைக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் துவங்கப்பட்டு வினியோகத்திலும் அந்நிறுவனம் ஈடுபட்டது.
1961ம் வருடம் எம்.ஜி.ஆர், சரோஜாதேவி நடிப்பில் ‘திருடாதே’ படம் வெளியானது. இந்த படத்தின் சென்னை வினியோக உரிமையை எம்.ஜி.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியது. சென்னையில் பழைய படங்களை திரையிடும் பிளாசா, பாரத் மற்றும் மகாலட்சுமி ஆகிய திரையரங்குகளில் ‘திருடாதே’ படம் வெளியானது.
இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் தொட்டதெல்லாம் துலங்கியதற்கு அந்த ஒரு குணம்தான் முக்கிய காரணம்! பிரபலம் சொல்லும் ‘வாவ்’ தகவல்
அந்த 3 திரையரங்குகளிலும் திருடாதே படம் 100 நாட்கள் ஓடியது. அதனால், சென்னையிலும் எம்.ஜி.ஆர் படங்களை திரையிட தியேட்டர் அதிபர்கள் ஆர்வம் காட்டினார்கள். எம்.ஜி.ஆர் சரித்திர கதைகளுக்கு மட்டுமே செட் ஆவார் என்கிற இமேஜை திருடாதே படம் உடைத்தது.
அதன்பின், எம்.ஜி.ஆரின் வலதுகரமாக இருந்த ஆர்.எம்.வீரப்பன் சத்யா மூவிஸ் நிறுவனத்தை துவங்கினார். எம்.ஜி.ஆரை வைத்து ஜனரஞ்சகமான படங்களை தயாரித்தார். எம்.ஜி.ஆரிடம் 500 ரூபாய் சம்பளம் வாங்கி கொண்டிருந்தவர் அவருக்கே சம்பளம் கொடுக்கும் முதலாளியாக மாறினார்.