துணிவு படத்தில் நான் வில்லனாக நடித்திருக்க வேண்டும்... விஜயால் அது நடக்கவில்லை... ஓபன் ஸ்டேட்மெண்ட் விட்ட பிரபலம்

Vijay_Ajith
விஜய் படத்தால் துணிவு படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு பறிபோனதாக முக்கிய பிரபலம் ஒருவர் தெரிவித்து இருக்கிறார்.

Vijay_Ajith
விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்ட பணிகள் தயாராகி கொண்டிருக்கிறது. இப்படத்தினை பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு அறிவிப்புகளை வெளியிட்டு விட்டது. இப்படத்திற்கு போட்டியாக அஜித் நடிப்பில் உருவாகி வரும் துணிவு படமும் களத்தில் உள்ளது.
இதையும் படிங்க: எம்ஜிஆருக்கு கடைசி வரை உண்மையாக இருந்த இரு பெண்கள்!.. யாருனு தெரியுமா?..
இரண்டு படமும் மிகப்பெரிய நடிகர்களின் படம் என்பதால் பொங்கல் தினத்துக்கு ரசிகர்கள் இப்போதே ஆவலாக காத்திருக்கின்றனர். துணிவு படத்தில் வில்லனாக சமுத்திரகனி, ஜான் கொக்கன் நடிக்கலாம் எனத் தெரிகிறது.

Shaam
ஆனால் முதலில் இந்த படத்தில் வில்லனாக ஷாமை நடிக்க வைக்க அஜித் அவரிடம் கேட்டு இருக்கிறார். ஆனால் அதற்கு முன்னரே ஷாம் விஜயின் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு விட்டார். இரண்டு படமும் ஒரே நேரத்தில் தான் படப்பிடிப்புகள் நடந்தது. இதனால் தனால் துணிவு படத்தில் நடிக்க முடியாது என ஷாம் கூறிவிட்டாராம். அதுமட்டுமல்லாமல் விஜயிடம் பொங்கல் தினத்தில் துணிவு படமும் வெளியாகிறது என்பதை கூறினாராம். அப்போது விஜய் நம்ம நண்பர் படம் தானே, வரட்டும். ரெண்டு படமும் நன்றாக ஓடட்டும் என விஜய் கூறியதாகவும் இதை தன்னுடைய பேட்டி ஒன்றில் ஷாம் தெரிவித்து இருக்கிறார்.