கமல் கொஞ்சம் ஓவர்... லட்ச ரூபாய் கொடுத்தாலும் அவரின் நாயகியாக நடிக்க மாட்டேன்.. மறுத்த கோலிவுட் நடிகைகள்...
கமல் முத்தமே கொடுத்தாலும் வாங்கிக்கொண்டு நடித்த நடிகைகள் மத்தியில் எத்தனை லட்சம் கொடுத்தாலும் அவருடன் நடிக்கவே மாட்டேன் என இரு நடிகைகள் பிடிவாதமாக இருந்ததும் நடந்து இருக்கிறது.
தமிழ் சினிமாவின் மாபெரும் கலைஞர் என புகழப்படுபவர் கமல்ஹாசன். களத்தூர் கண்ணம்மாவில் தொடங்கிய அவர் பயணம் சமீபத்தில் வெளியான விக்ரம் வரை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. கோலிவுட்டில் தற்போது இருக்கும் பல லேட்டஸ்ட் டெக்னாலஜிகளுக்கு அவர் தான் காரணம்.
ஆனால் எல்லாருக்கும் ஒரு கருப்பு பக்கம் இருக்கும் தானே. அப்படி கமலும் சினிமாவில் செய்த விஷமத்தனங்களை செய்து இருக்கிறார். 80ஸ் காலக்கட்டத்தில் கமல் தன்னுடன் நடித்த எல்லா நடிகைகளுக்குமே கிஸ் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தார்.
அவரோ அப்போது மிகப்பெரிய உச்சத்தில் இருந்ததால் நடிகைகளும் வாய்ப்புக்காக அந்த முத்தத்திற்கு கூட எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் நடித்து விடுவார். இதில் சில விதிவிலக்காக இரண்டு நடிகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இதையும் படிங்க: இதனால் தான் கமலுடன் நடிக்கவில்லை… ரகசியத்தை உடைத்த நதியா…
முதலாவது நடிகை நதியா, குடும்ப பாங்கான கேரக்டரில் நடித்த ஹிட் அடித்த நதியா எப்போதுமே இளமையாகவே இருப்பார். ரஜினி படங்களில் நடித்தவர் கமலுடன் நடிக்கவே இல்லை. இதுகுறித்து விசாரித்த போது, கமல் முத்தம் கொடுப்பதில் நதியாவிற்கு துளியும் விருப்பமில்லையாம். அதனால் அவருடன் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் மறுத்து விட்டாராம்.
அவரை தொடர்ந்து நடிகை சுவலட்சுமிக்கும் கமலுடன் நடிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்தாலும் அவருடன் என்னால் நடிக்க முடியாது. குடும்ப பாங்கான கேரக்டரில் மட்டுமே நடிப்பேன் என மறுத்துவிட்டாராம். இந்த தகவலை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.