ஒரு லட்சம் கொடுத்தாலும் எனக்கு வேணாம்... ஆள விடுங்க.. பிக்பாஸ் வாய்ப்பை மறுத்த நடிகை
பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் கிடைத்த வாய்ப்பை வேண்டவே வேண்டாம் என சின்னத்திரை நடிகை மறுத்து விட்டாராம்.
விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் துவங்கி 50 நாட்கள் கடந்து விட்டது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கு இந்த நிகழ்ச்சியில் விஜே மகேஸ்வரி, ஏடிகே, திருநங்கை சிவின் கணேசன், ராம், குயின்சி, கதிரவன், மைனா நந்தினி, ரக்ஷிதா, அசீம், விக்ரமன், பொதுமக்களில் இருந்து தனலட்சுமி, ராபர்ட் மாஸ்டர் என ஏகப்பட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டிருக்கின்றனர்.
இதுவரை அசல் கோளாறு, சாந்தி, மகேஸ்வரி, ஷெரீனா, நிவா உள்ளிட்ட பிரபலங்கள் இதுவரை வெளியேறி இருக்கிறார்கள். மற்ற சீசனை போல இல்லாமல் இந்த சீசனில் துவக்கத்தில் இருந்தே ஏகப்பட்ட சச்சரவுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கிறது.
இந்நிலையில், விஜய் தொலைக்காட்சியின் நடிகையாக இருக்கும் தீபாவிடம் பிக்பாஸ் குழு அணுகி இருக்கிறது. ஒரு வாரத்திற்கு ஒரு லட்சம் வரை கொடுப்பதாக கூட கூறினார்களாம். ஆனால் தீபா ஆளை விடுங்க. அதில் சென்று வந்தால் என் நிலைமை என்ன ஆகும்? நான் குண்டாக வேற இருக்கிறேன்.
அதனால் நிகழ்ச்சியில் அதிக விமர்சனங்களை சந்திக்க நேரிடும். வெளிவந்து வாய்ப்புகள் வந்தாலும் அதில் ஏற்படும் அவமானங்களை என்னால் எதிர்கொள்ள முடியாது என விலகி விட்டாராம்.