Categories: Cinema News latest news

நடிக்க முடியாமல் விலகிய ஜோதிகா… தளபதி68ல் அவருக்கு ஜோடியாகும் முன்னணி நடிகை! அடடே!

விஜய் தன்னுடைய லியோ படத்தின் வேலைகளை முடித்து விட்டு தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் படு பிஸியாக இருக்கிறார். சமீப நாட்களாக அப்படத்தின் தகவல்களும் வெளியாகி வருகிறது. தற்போது இப்படத்தில் ஒரு திடீர் ட்விஸ்ட் நடந்து இருக்கிறது.

கல்பாத்தி எஸ்.அகோரம் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தினை வெங்கட் பிரபு இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தற்போது வரை பெயர் வைக்கப்படாமல் தளபதி68 எனச் சொல்லப்பட்டு வரும் இப்படத்தின் பெயர் லியோ ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சியில் கூட அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: வடிவேலு சரியான ஆளுங்க… குத்தமா சொல்லல… சும்மா சொல்லணும்னு தோணிச்சு… பகீர் கிளப்பிய பயில்வான்

இப்படத்தினை இயக்குனர் வெங்கட் பிரபுவிற்கு கொடுக்கும் போதே விஜயிற்கு கதையில் அதீத நம்பிக்கை இருந்ததாக கூறப்படுகிறது. அப்படி ஒரு கதையை தான் வெங்கட் கூறியதாகவும் அதனால் தான் விஜய் இதற்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து இந்த படத்தில் நடிகை ஜோதிகா ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியது. மற்ற நாயகிகள் போல் இல்லாமல் தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸில் தனித்துவமான கதையை தேர்ந்தெடுத்து நடிப்பதால் கண்டிப்பாக கதையின் மீது வெயிட் ஏறியது.

இதையும் படிங்க: இனிமே என் காட்டுல மழை தான்… ஓவர் பில்டப் கொடுக்கும் வடிவேலு! இதே உருட்டதான முன்னவும் போட்டீங்க!

அப்பா மற்றும் மகன் என இரு வேடங்களில் விஜய் நடிக்க இருக்கும் இப்படத்தில் ஒரு வேடம் ரா ஏஜெண்ட் என்று கூறப்படுகிறது. அப்படத்தின் விஎஃப்எக்ஸ் காட்சிகளுக்காக லண்டனுக்கு  விஜய் சென்று இருக்கிறார்.  இதுமட்டுமல்லாமல் தற்போது யுவன் ஷங்கர் ராஜாவுடன் தமனும் இசையமைக்க இருப்பதும் தளபதி 68 படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பினை உருவாக்கி இருக்கிறது. 

மேலும் இப்படத்தில் இருந்து தற்போது ஜோதிகா விலகி இருக்கிறார். அவருக்கு கால்ஷூட் பிரச்னை இருப்பதால் தான் விலகி இருக்கிறார் என்றும் வேறுபிரச்னைகள் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த வேடத்தில் அவருக்கு பதில் தற்போது சிம்ரன் நடிக்க இருக்கிறாராம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை படக்குழு தரப்பில் இருந்தே விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
Akhilan