பிக்பாஸ் தமிழ் 7: இந்த சீசனோட வெஷபாட்டில் இவர்தான்!.. கழுவி ஊற்றும் ரசிகர்கள்..
Biggboss Tamil season 7: உலக நாயகன் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 6 சீசன்கள் முடிந்து ஏழாவது சீசனில் தொடங்கியுள்ளது. 13 நாட்களை வெற்றிகரமாக நிகழ்ச்சி தாண்டிய நிலையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை அனன்யா, பவா செல்லத்துரை என இரண்டு போட்டியாளர்கள் வெளியேறி விட்டனர்.
அனன்யா எவிக்ஷன் ஆகி வெளியேற,பவா தானாகவே வெளியேறி விட்டார். இந்த வாரம் யுகேந்திரன் தலைவர் ஆகி விட்டதால் அவர் அடுத்த வார எவிக்ஷனில் இருந்து தப்பித்து விட்டார். மேலும் யுகேந்திரனுக்கு சமூக வலைதளங்களில் ஆர்மியும் உருவாகி விட்டது. அவர் ஒரு ஜெண்டில்மேன் என்பதை ரசிகர்களும் தெரிந்து கொண்டு அவரை புகழ ஆரம்பித்து உள்ளனர்.
எனவே வலிமை மிகுந்த போட்டியாளர்களில் ஒருவராக அவர் நீண்ட நாட்கள் அங்கு தாக்குப்பிடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆனால் யுகேந்திரன் கேப்டன் ஆனது மாயாவுக்கு பிடிக்கவில்லை. வழக்கம் போல தன்னுடைய இன்னொரு பக்கத்தை காட்டி சவடால் பேச ஆரம்பித்து இருக்கிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை ஒவ்வொரு சீசனிலும் ஒரு விஷ பாட்டில் உள்ளே இருப்பார். அவர் எவ்வளவு தான் அழகியாக, அறிவாளியாக, உலகம் தெரிந்தவராக இருந்தாலும் மண்டையில இருக்குற கொண்டைய மறந்துடீங்க என்பது போல தான் ஒரு ஸ்னேக் பாபு என்பதை அவ்வப்போது வெளியே காட்டி விடுவார்.
அந்த வகையில் இந்த சீசனின் விஷ பாட்டில் யார் என்பதை ரசிகர்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் இளமையான, துடிப்பான போட்டியாளர்களில் ஒருவரான மாயா தான் இந்த சீசனின் விஷ பாட்டில் என்னும் கவுரவத்தை தட்டி செல்கிறார்.
இவர் நடந்து கொள்ளும் முறை மிகவும் எரிச்சலூட்டும் ஒன்றாக இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றி வருகின்றனர். அதிலும் ரசிகர் ஒருவர் அவர் வெஷபாட்டில் கூட கிடையாது விஷ பேக்டரி என்று கருத்து தெரிவித்து இருக்கிறார்.(ரொம்ப பாதிக்கப்பட்டு இருப்பார் போல) இதேபோல உள்ளே உள்ள போட்டியாளர்களுக்கு எல்லாம் ஒரு பெயர் சூட்ட வேண்டும என்றால் உங்களின் முதல் சாய்ஸ் எந்த போட்டியாளராக இருப்பார்?