ஆசைப்பட்டாலும் நடக்க மாட்டுங்குதே!...ரூட்ட மாத்தி ஹிட் அடித்த டாப் பிரபலங்கள் இவர்கள்தான்...

by Akhilan |
ஆசைப்பட்டாலும் நடக்க மாட்டுங்குதே!...ரூட்ட மாத்தி ஹிட் அடித்த டாப் பிரபலங்கள் இவர்கள்தான்...
X

தமிழ் சினிமாவில் டாப்பில் இருக்கும் பிரபலங்கள் முதலில் சினிமாவிற்கு வந்த துறையே வேறாக இருக்கும். பின்னர் இது தங்களுக்கு சரியில்லை என்பதை புரிந்து கொண்டவர் வேறு துறைக்கு மாறி விடுவார்கள்.

வெங்கட் பிரபு:

இப்போ இயக்குனராக இருப்பவருக்கு ஆசையே நாயகனாக வேண்டும் என்பது தான். அப்பா பெரிய பெரிய ஹிட் படங்களை கொடுத்தவர். பெரியப்பா இளையராஜாவோ இசை உலகின் ஜாம்பவானாக இருந்தவர். இருவர் மாதிரி இல்லாமல் நடிப்பில் ஜெயிக்க வேண்டும் என்பதே வெங்கட் பிரபுவின் ஆசை.

பூஞ்சோலை படத்தில் பெரியப்பா இசையமைக்க அப்பா இயக்க நாயகனாக எண்ட்ரி ஆனார். ஆனால் முதல் படம் ரிலீஸே ஆகவில்லையாம். பஞ்சு அருணாச்சலம் தயாரிப்பில் அகத்தியன் இயக்கிய காதல் சாம்ராஜ்யம் படத்தில் நடித்தார். அந்த படம் தான் கோலிவுட்டில் இவருக்கு முதல் படமாக அமைந்தது.

பிரபலங்கள்

Venkat prabhu

நடிகராக அவருக்கு வாய்ப்பு அமையவில்லை. ஏப்ரல் மாதத்தில் படத்தில் ஒரு சைட் ரோல் தான் கிடைத்தது. அதிலும் நடித்தார். ஆனால் அவருக்கு அதிலும் பெரிய பெயர் கிடைக்கவில்லை. இவரின் நெருங்கிய நண்பர் சரணுடன் அவர் இணைந்து நடித்த படம் உன்னை சரணடைந்தேன். இந்த படத்தினை சமுத்திரக்கனி இயக்கினார். அதுவும் அவருக்கு கைக்கொடுக்கவில்லை. அடுத்து சில படங்களில் நடித்தவருக்கு நாயகன் ஆசை விட்டு போனது.

அவருக்கே ஒரு உந்துதலில் இயக்குனராக மாறி எடுத்த படம் தான் சென்னை 600028. படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. வெங்கட் பிரபுவும் இயக்குனராக ஒரு இடத்தினை பிடித்தார். தொடர்ச்சியாக அவரின் இயக்கத்தில் வெளியான சரோஜா, கோ மற்றும் மங்காத்தா என ஹிட் படங்களை கொடுத்தார்.

ஆனால் அதற்கடுத்து அவரின் இயக்கத்தில் வெளியான சில படங்கள் ஓடவில்லை. வெங்கட் பிரபு அவ்வளவு தான்ப்பா என யோசித்து கொண்டிருந்த நேரத்தில் தான் மாநாடு படத்தினை இறக்கினார். இது வெங்கட் பிரபுவிற்கு மட்டுமல்ல சிம்புவிற்குமே மிக முக்கிய படம். மிகப்பெரிய வெற்றியை பெற்ற மாநாடு பலருக்கும் பிடித்த படமாக மாறியது.

இதையும் படிங்க: மாஸ் ஹிட்டான தமிழ் படங்களை, ரீமேக் என்ற பெயரில் பாலிவுட் செய்யும் டாப் 5 நாசங்கள்… உங்க அலும்பு தாங்கலடா!

சுஹாசினி:

தமிழ் சினிமாவின் மாபெரும் நடிகராக இருக்கும் கமலின் அண்ணன் மகள் தான் சுஹாசினி. இவர் முதலில் நடிகையாக சினிமாவிற்குள் வரவில்லை. பெரிய ஒளிப்பதிவாளராக வேண்டும் என்று அசோக்குமாரிடம் உதவியாளராக சேர்ந்தார். உதிரிப்பூக்கள், ஜானி, காளி போன்ற திரைப்படங்களில் அவரிடம் பணிபுரிந்து வந்தார்.

மகேந்திரன் நெஞ்சத்தை கிள்ளாதே படத்தில் நாயகியாக நடிக்க வைத்தார். இருந்தும் மீண்டும் உதவி ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தார். ஆனால் முதல் படமே வெற்றி படமாக அமைந்ததால் அவருக்கு தொடர்ச்சியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சிந்து பைரவி, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளிலும் 200க்கும் அதிகமான படங்களில் நாயகியாக நடித்தார்.

Suhashini

தம்பி ராமையா:

தமிழ் சினிமாவுக்கு இயக்குனராக வந்தவர் தம்பி ராமையா. மனுநீதி என்ற படத்தினை முரளியை வைத்து இயக்கினார். ஆனால் அவருக்கு பெரிய வாய்ப்பு வரவில்லை. இருந்தும் சினிமாவில் தொடர்ந்து இருக்க சின்ன வேடங்களில் நடித்து வந்தார். அதை தொடர்ந்து வடிவேலு நடிப்பில் உருவான இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தினை இயக்கி இருந்தார். அந்த படமும் சரியாக போகாததால் நடிப்பினை தொடர்ந்தார். அதை தொடர்ந்து மைனா படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது வாங்கியதால் தொடர்ச்சியாக நடிகராகவே இருந்து விட்டார்.

Next Story