Connect with us
yogi

Cinema News

அஜித்தை பற்றி யோகிபாபு சொன்னதுக்கு ஆதாரம் இருக்கா? பூதாகரமாக கிளம்பிய பிரச்சினை

Ajith Yogibabu: நேற்று வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி யோகிபாபுவை பற்றி பேசிய செய்திதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது சில தினங்களுக்கு முன்பு யோகி பாபு ஒரு youtube சேனலுக்கு வலைப்பேச்சு சேனலை தாக்கி பேசுவது மாதிரியான ஒரு செய்தியை பேசியிருந்தார். அதாவது  ‘அவங்க எனக்கு எதிரா ஏதேதோ சொல்லிட்டு இருக்காங்க. அதனால் அவர்களுக்கு தொலைபேசியில் அழைத்து நான் பேசியபோது ஏதாச்சும் கவனிங்க. இனிமேல் இப்படி நாங்க பேச மாட்டோம்’ என சொன்னதாக அந்த youtube சேனலில் யோகி பாபு கூறியிருந்தார்.

ஆனால் அவர் கூறியது வலைப்பேச்சு பிஸ்மி மற்றும் அந்தணனைப் பற்றி தான். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் கமெண்ட்களில் பிஸ்மி மற்றும் அந்தனனை பற்றி கண்டபடியாக கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இதனால் கோபம் அடைந்த பிஸ்மி மற்றும் அந்தனன் நேற்று அவர்களுடைய சேனலில்  ‘நாங்கள் காசு கேட்டோம் என்பது உண்மையாக இருந்தால் அதற்கு ஆதாரம் இருக்கும். அதை யோகிபாபுவை காட்டச் சொல்லுங்கள்.

இதையும் படிங்க: அப்போ பிக்பாஸ் இவர் தானா? புரோமோ ஷூட்டில் கசிந்த வீடியோ… பக்காவா இருக்காரே!..

ஒருவேளை நாங்கள் தொலைபேசியில் அவரிடம் கேட்டிருந்தால் அந்த தொலைபேசி ஆதாரமும் அவரிடம் இருக்கும். அதை வெளிப்படுத்தச் சொல்லுங்கள். இல்லாவிட்டால் அவர் எல்லாவற்றிற்கும் மேலாக நினைக்கும் முருகன் மீது சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்கள்’ என பேசியிருந்தார்கள். அதுமட்டுமல்லாமல் சில வருடங்களுக்கு முன்பு யோகிபாபு பிஸ்மி மற்றும் அந்தணிடம்  ஒரு பெரிய நடிகரைப் பற்றி கூறியதாக ஏற்கனவே வலைப்பேச்சில் பேசியிருந்தார்கள்.

ஆனால் அந்த பெரிய நடிகர் அஜித் தான் என நேற்றைய செய்தியில் அவர்கள் வெளிப்படையாக போட்டு உடைத்து இருக்கிறார்கள். ஆனால் முதலில் கூறும் போது அஜித்தின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக பெரிய நடிகர் என்றே தான் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் யோகிபாபுவின் அந்த வீடியோவால் கடுப்பான வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி பகிரங்கமாகவே அஜித்தை பற்றி தான் யோகி பாபு கூறியிருக்கிறார் என நேற்று வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இதையும் படிங்க: ‘தங்கலான் விருந்து’ ஆத்தாடி இதெல்லாம் இருந்துச்சா?

இந்த நிலையில் யோகி பாபு அஜித்தை பற்றி பேசியதற்கு ஆதாரம் இருக்கிறதா எனபிஸ்மியிடம் ஒரு கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிஸ்மி நாங்கள் இதுவரைக்கும் எங்களிடம் வரும் சினிமா பற்றிய தகவல்கள், பிரபலங்கள் பற்றிய தகவல்கள் வாய் வழியாக வந்தாலோ அல்லது தொலைபேசியில் வந்தாலோ அதை என்றைக்குமே ரெக்கார்டு செய்து பழக்கம் இல்லை.

ஆனால் உண்மையாகவே யோகிபாபு எங்களிடம் அஜித்தை பற்றி இப்படித்தான் கூறினார் என பிஸ்மி கூறி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் அஜித்தை ஆரம்பத்திலிருந்து எனக்கு நன்றாகவே தெரியும். அவர் முதல் படத்திலிருந்து எனக்கு தெரியும். அவர் இனிமையானவர். நன்கு பழக கூடியவர். யாரைப் பற்றியும் தேவையில்லாமல் பேச மாட்டார். ஒரு நல்ல மனிதர்.

இதையும் படிங்க: அஜித், விஜய்க்கு முந்தைய கால நடிகர்கள் ஒழுக்கமானவர்களா? புது பிரச்சினையை கிளப்பிய நடிகை

இப்படி இருக்கும் போது யோகி பாபு எங்களிடம் அன்று வந்து திடீரென சொன்னது எங்களுக்கே ஷாக்கிங்காக தான் இருந்தது. இருந்தாலும் எப்போதுமே பாதிக்கப்பட்டவர்களின் பக்கம் தான் நாங்கள் இருப்போம். அதனால் அன்று யோகி பாபு இப்படி சொன்னதால் அவருக்கு பக்கபலமாக இருந்து அன்றைய செய்தியில் நாங்கள் வெளியிட்டு இருந்தோம். அதற்காக அஜித்துக்கு எதிரானவன் நான் கிடையாது.

அஜித்தை பொறுத்தவரைக்கும் என்னை அவருக்கு நன்றாகவே தெரியும். என்னை அவருக்கு மிகவும் பிடிக்கும் என பிஸ்மி கூறி இருக்கிறார். மேலும் நாங்கள் நேற்று வெளியிட்ட வீடியோவை தொடர்ந்து திடீரென அவருடைய இணையதள புகைப்படத்தை மாற்றி இருக்கிறார். அதாவது முருகனுடைய வேல் புகைப்படத்தை வைத்திருக்கிறார். அது என்ன காரணம் என்பது எனக்கு தெரியவில்லை.

இதையும் படிங்க: அஜித் மேல் இப்போ வரைக்கும் கோபம் இருக்கு! என்ன லைலா இப்படி சொல்லிட்டாங்க?

ஒரு வேளை அந்த வேல் எங்கள் கண்ணை வந்து குத்தட்டும் என நினைத்து வைத்தாரா என்று தெரியவில்லை. மேலும் வேதாளம் படப்பிடிப்பில் அஜித்துடன் இருக்கும் மாதிரியான புகைப்படத்தை வெளியிட்டு மை பேவரைட் ஹீரோ என்றும் பதிவிட்டு இருக்கிறார். இதெல்லாம் இப்பொழுது ஏன் செய்கிறார் என தெரியவில்லை. இல்லாவிட்டால் அன்றைக்கே எங்களிடம் வந்து அஜித் அப்படிப்பட்டவர் இல்லை என சொல்லி இருக்கலாம்.

இருந்தாலும் நாங்கள் அவருக்கு எதிராக சவால் விட்டது விட்டதுதான். நாங்கள் பணம் கேட்டது உண்மை என அவர் நிரூபிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் முருகன் மீது அவர் சத்தியம் செய்ய வேண்டும் என பிஸ்மி கூறியிருக்கிறார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top