Connect with us

Cinema News

அட மீண்டும் மீண்டுமா? தளபதி 69ஐ இவர்தான் இயக்க போகிறாராம்! என்னங்க சார்!

தமிழ் சினிமாவில் இயக்குனர் அறிவிப்பே தற்போது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறது. யாருடன் யார் செய்கிறார்? இவர் இயக்கினால் படத்தின் வெற்றி எப்படி இருக்கும் என ரசிகர்களும் உன்னிப்பாக கவனிக்க தொடங்கி இருக்கிறார்கள். இதனால் நடிகர்களும் தங்களின் இயக்குனரை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அஜித் கூட முதலில் விக்னேஷ் சிவனுடம் படம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அவரின் கதை மீது திருப்தி இல்லாததால் அவரை வேண்டாம் எனக் கூறி விட்டார். அதன் பின்னர் அவரின் இயக்குனராகி இருக்கிறார் மகிழ் திருமேனி. இருந்தும் விடாமுயற்சி படப்பிடிப்பு இன்னமுமே தொடங்கப்படாமலே இருக்கிறது.

இதையும் படிங்க: நான் எழுதின பாட்ட கண்ணதாசன்னு நினைச்சார் எம்.ஜி.ஆர்!. வாலி சொன்ன சீக்ரெட்!..

அதுவே அந்த பக்கம் பார்த்தால் விஜய் படு பிஸியாக இயங்கி கொண்டு இருக்கிறார். தன்னுடைய லியோ படத்தினை முடித்து விட்டு தற்போது தளபதி68ல் இணைந்து விட்டார். இப்படத்தில் இரண்டு கதாபாத்திரம் என்றும், விஜய் அப்பாவாகவும், மகனாகவும் நடிக்கிறார். இதில் ஒரு வேடம் ரா ஏஜெண்ட் என்று கூறப்படுகிறது.

இதற்காக விஎஃப் பணிகள் இப்போதே தொடங்கி இருக்கிறது. விஜயின் லுக் டெஸ்ட் என பல வேலைகள் இருக்க அவரை படக்குழு அலேக்காக லண்டனுக்கு தூக்கி சென்று விட்டனர். அங்கிருந்து லாஸ் ஏஞ்சல்ஸுக்கு விஜய் செல்கிறார். படப்பிடிப்பு கூட செப்டம்பர் கடைசியிலே தொடங்கப்பட்டு விடும் என்று கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: தாத்தா வழியில் பேரன்… ஜேசன் எண்ட்ரிக்கு எஸ்.ஏ.சி ரியாக்‌ஷன் என்ன தெரியுமா? பாசம் தான்!

இப்படத்திற்கு விஜய் 35நாட்கள் தான் கால்ஷூட் கொடுத்து இருக்கிறாராம். அதற்குள் படப்பிடிப்பை முடித்து கொள்ள வெங்கட் பிரபுவிடமும் கூறி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனால் பரபரப்பாக படக்குழு இயங்கி வருகின்றனர். இந்த நிலையில், தளபதி 69 படத்தினை இயக்க இருப்பது அட்லீ தான் என்று ஒரு தகவல் இணையத்தில் கசிந்து இருக்கிறது.

ஏற்கனவே அட்லிக்கு விஜய் மூன்று படங்களை கொடுத்து இருக்கிறார். அனைத்துமே காப்பி என கலாய்க்கப்பட்டாலும் வசூல் ரீதியாக ஹிட் படங்களாகவே அமைந்தது. இதனால் தன்னுடைய அரசியல் எண்ட்ரிக்கு முந்தைய படம் அவரின் பாணியில் பக்கா கமர்சியல் படமாகவும், ஹிட்டாகவும் அமைய வேண்டும் என விஜய் விரும்புகிறார். இதற்கு ஒரே கியாரண்டி என்றால் அது அட்லியாக தான் இருக்க முடியும் என நம்புகிறாராம். அது சரி தான்!

google news
Continue Reading

More in Cinema News

To Top