இன்று தமிழ்த்திரை உலகில் முன்னணி நடிகர்களின் சம்பளம் கோடிக்கணக்கில் எகிறிக்கொண்டு போகிறது. ஏன் நடிகைகளே கோடிகளில் தான் சம்பளம் வாங்குகிறார்கள். விஜய் 200 கோடியைத் தொட்டுக் கொண்டுள்ளார். ரஜினியும் 100 கோடியைத் தாண்டி சம்பளம் பெற்று வருகிறாராம்.
அப்படிப் பார்க்கும்போது சூப்பர்ஸ்டார் அந்தக் காலத்தில் ஒரு படத்துக்கு நாலாயிரம் ரூபாய் தான் சம்பளம் வாங்கினார் என்றால் ஆச்சரியம் தானே. அது எந்தப் படம் என்று பார்ப்போம். இதுகுறித்து கவியரசர் கண்ணதாசனின் மகன் அண்ணாத்துரை கண்ணதாசன் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கவிக்குயில் சூட்டிங். சிக்மகளூர்ல நடக்குது. ரஜினி சார் அதுல வண்டிக்காரனா வருவாரு. அப்போ அவரது சம்பளம் நாலாயிரம் ரூபாய்.
படாபட் ஜெயலட்சுமி ஜோடியா நடிக்கிறாங்க. ஒரிஜினல் ஜோடி சிவகுமார், ஸ்ரீதேவி தான் ஹீரோ, ஹீரோயின். இவங்க ரெண்டாவது ஜோடி. அப்போ கண்ணதாசனுக்கு விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனா சென்னையில இருந்து யாருமே வரல. உடனே அப்பா பஞ்சு அருணாச்சலத்துக்குப் போன் பண்ணி ‘யார் யாரெல்லாம் சூட்டிங்ல இருக்காங்களோ… அவங்களை எல்லாம் அப்படியே கூட்டிட்டு வா’ன்னு சொல்லிட்டாரு.
அந்தப் படத்துக்கு பஞ்சு அருணாச்சலம் படம். அது தான் இந்த பங்ஷன். அப்போ ரஜினி சார் அப்பாவோட காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். கவியரசரின் சமயோசிதப் புத்திக்கு இந்த சம்பவமே நல்ல உதாரணம் தான்.
இதையும் படிங்க… லட்சக் கணக்கில் சம்பளம் வாங்கிய வாலியின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஆச்சரியம்தான்
1977ல் வெளியான படம் தான் கவிக்குயில். தேவராஜ் மோகன் இயக்கினார். இளையராஜா இசை அமைத்தார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முருகன் என்ற கேரக்டரில் வருவார். ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’, ‘காதல் ஓவியம்’, ‘குயிலே கவிக்குயிலே’, ‘உதயம் வருகின்றதே’, ‘மானாடும் பாதையிலே’, ‘ஆயிரம் கோடி’ என முத்து முத்தான பாடல்கள் இந்தப் படத்தில் தான் வருகின்றன.
Viduthalai part2:…
Viduthalai2: ஒளிப்பதிவாளர்…
சிவகார்த்திகேயன் படங்கள்…
கங்குவா படத்தின்…
Director Atlee:…