Connect with us

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய வித்தியாசமான பாடல் இதுதான்!

ilyaraja

Cinema History

தமிழ் சினிமாவில் புரட்சியை ஏற்படுத்திய வித்தியாசமான பாடல் இதுதான்!

ilyaraja

தமிழ் சினிமாவில் பல பாடல்கள் வித்தியாசமாக வந்த வண்ணம் உள்ளன. ஆனால் 80 காலகட்டங்களில் இதுபோன்ற வந்தபாடல்கள் பல உள்ளன. அவற்றில் மறக்க முடியாத பாடல் இது.

spb

தாளம் போட வைக்கும் ரகம். ராகம் மோகனம். வைரமுத்துவின் முத்தான வரிகளுக்கு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சத்தாக பாடி உள்ளார்.

kaathal-oviyam

1982ல் வெளியான பாரதிராஜாவின் காதல் ஓவியம் படத்தில் இசைஞானியின் மெட்டில் பாடல் புதுமொட்டாக மலர்ந்துள்ளது. இனிமை என்றால் இதுதானோ என்று கேட்கும் அளவுக்கு பாடலின் சந்தம் உள்ளது. பாடலில் ஒரு பெரிய விசேஷம் என்னவென்றால் அதுதாங்க பாடலின் சிறப்பம்சம்.

தமிழ் பாடலுக்கே உரியது. தமிழின் பெருமையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் பாடல் என்று கூட புகழ் பரப்பலாம். அந்த அளவிற்கு இந்தப் பாடல் அமைந்துள்ளது. ஒரு பாடலின் ஒவ்வொரு வரியின் முடிவிலும் நீங்கள் உற்று கவனித்தால் அந்த ஒற்றுமையைக் காண முடியும்.

poovil-vandu

அதை பாடலின் போது இசை மழையில் நனைவதால் ரசிக்க முடியுமே தவிர அந்த ஒரு ஒற்றுமையை கண்டறிவது கடினம். இசையை உன்னிப்பாக அணுஅணுவாக ரசிக்கும் கலைஞனுக்கு மட்டுமே இது சாத்தியம்.

அப்படி என்ன ஒற்றுமை இந்தப் பாடலின் வரிகளில் ஒளிந்துள்ளது என்றால், பாடலின் ஒவ்வொரு வரியின் இறுதியிலும் முடியும் எழுத்து ‘ம்’ ஆகவே இருக்கும். அதுவே அழகான சந்தமாக அமைந்திருக்கும். அப்படி ஒரு முத்தான பாடல்.

vairamuthu

முத்துகள் போன்ற வார்த்தைகளை பக்குவமாக கோர்த்திருக்கும் பாடல். இந்தப் பாராட்டுக்கு உரியவர் நம் கவிப்பேரரசு வைரமுத்து தான்.

நான் ரசித்த அந்தப் பாடலின் வரிகள் உங்களுக்காக இதோ:

காதல் ஓவியம் – பூவில் வண்டு கூடும் கண்டு
நம்தம் நம்தனம்தம் நம்தனம்தம் நம்தனம்தம்
பூவில் வண்டு கூடும்
கண்டு பூவும் கண்கள் மூடும்
பூவினம் மானாடு போடும்
வண்டுகள் சங்கீதம் பாடும்
நம்தம்…நம் த நம்தம்…

(பூவில்)

ராகம் ஜீவனாகும்
நெஞ்சின் ஓசை தாளமாகும்
கீதம் வானம் போகும்
அந்த மேகம் பாலமாகும்
தேவி எந்தன் பாடல் கண்டு மார்பில் நின்று ஆடும்
நாதம் ஒன்று போதும்
எந்தன் ஆயுள் கோடி மாதம்
தீயில் நின்றபோதும்
அந்தத் தீயே வெந்து போகும்
நானே நாதம்…! ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…அ
நம்தம்…நம் த நம்தம்…

(பூவில்)

வானம் என் விதானம்
இந்த பூமி சன்னிதானம்
பாதம் மீது மோதும்
ஆறு பாடும் சுப்ரபாதம்
ராகம் மீது தாகம் கொண்டு ஆறும் நின்று போகும்
காற்றின் தேசம் எங்கும்
எந்தன் கானம் சென்று தங்கும்
வாழும் லோகமேழும்
எந்தன் நாதம் சென்று ஆடும்
வாகை சூடும்…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…ஆ…அ
நம்தம்…நம் த நம்தம்…!

(பூவில்)

இப்போது தெரிகிறதா…? இது ஒரு தமிழ் புரட்சி பாடல் என்று!

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top