Connect with us

தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்பு இதுதாங்க…!

kathal-oviyam

Cinema History

தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்பு இதுதாங்க…!

kathal-oviyam

தமிழ் சினிமாவுக்கு பெருமை சேர்த்த படங்களைப் பட்டியலிட்டால் அவற்றில் கண்டிப்பாக இந்தப் படமும் இடம்பெறும். அப்படி ஒரு கதை. பாடல்கள். சிறந்த நடிப்பு என அனைத்திலும் விஞ்சி நிற்கிறது. பாரதிராஜாவின் காவிய படைப்பு காதல் ஓவியம்.

1982ல் வெளியான இப்படம் தமிழ்சினிமா வரலாற்றைப் புரட்டிப் போட்டு விட்டது. இவர் ஒரு புதுமுக கதாநாயகன் தானா என கேட்கும் அளவுக்கு அற்புதமாக இருந்தது கண்ணனின் நடிப்பு. அவ்வளவு யதார்த்தம். எடுத்த முதல் வேடமே கொஞ்சம் டஃப் ஆனதுதான். பார்வையற்றவர் வேடம். இருந்தாலும் அசத்தி விட்டார்.

actor

கண் கருவிழி முழுவதையும் மேலே உயர்த்தி அவர் பார்க்கும் போதும், கோவிலின் திண்ணையில் இருந்து பாடும் போதும் மனதை மெல்லிதாக வருடிச் செல்கிறார்.

அவருக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் ஜோடி ராதா. என்ன ஒரு நளினம். என்ன ஒரு நாட்டியம்?! என ரசிகர்களின் கண்களை அகல விரிய வைக்கிறார்.

1982ல் வெளியான இப்படத்திற்கு இசை அமைத்தவர் இளையராஜா. பாட்டுன்னா இதுதான் பாட்டு என்று அனைத்துத் தரப்பினரையும் கை தட்ட வைத்தது. தாலாட்ட வைத்தது. முணுமுணுக்க வைத்தது. தாளம் போட வைத்தது. மேடைக்கச்சேரிகளில் தவறாமல் இடம் பிடித்து சாதாரண பாடகர்களைக் கூட சாதனை பாடகராக்கியது. அவ்வளவு இனிமை வாய்ந்த பாடல்கள் இப்படத்தில் இடம்பெற்றுள்ளன. இன்னொன்றைக் கூட தைரியமாகச் சொல்லலாம். பாடலுக்காகவே ஓடிய படம் இது என்று.

pic3

குயிலே குயிலே, பூஜைக்காக வாழும், பூவில் வண்டு, வெள்ளி சலங்கைகள், அம்மா அழகே, சங்கீத ஜாதிமுல்லை, நாதம் என் ஜீவனே…, நதியில் ஆடும் ஆகிய முத்து முத்தான பாடல்கள் இப்படத்தில் தான் இடம்பெற்றுள்ளன.

இதுதாங்க…கதை…!

கண்ணன் ஒரு அனாதை. கோவிலில் பிறந்து பக்திப்பாடல்களைப் பாடுகிறான். ஒரு விபத்துக்குப் பின் குருடனாகிறான். கோவிலில் அவன் பாடுவதைக் கேட்கும் ராதா அவனைக் காதலிக்கிறாள்.

ஆனால், அவரது தாய் வடிவுக்கரசி தன் சிங்கப்பூர் உறவினர் ராதாரவியை தனது மருமகனாக்க விரும்புகிறார். ஆனால், ராதாவோ காதலில் உறுதியாக இருக்கிறாள். ராதா கண்ணனுக்குத் தேவையான அனைத்து வேலைகளையும் செய்கிறாள். ராதா இறுதியில் யாரை மணம் புரிகிறார்? கண்ணன் ராதா காதல் என்ன ஆனது என்பதை வெள்ளித்திரை விளக்குகிறது.

pic4

காதல் ஓவியம் கதாநாயகன் கண்ணனுக்கு தமிழ்சினிமாவில் அவருக்கான மரியாதையை கிடைக்கவில்லை. ஒரு படத்தில் மட்டுமே நடித்துள்ளார் இந்த கண்ணன். இதுபற்றி படத்தின் இயக்குனர் வைரமுத்து ஒரு விகடன் இதழில் இவ்வாறு பேட்டி கொடுத்துள்ளார்.

நான் அறிமுகம் செஞ்சவங்கள்லயே கண்ணன் வித்தியாசமானவன். திறமையான நடிகன்னு முதல் படத்திலேயே நிரூபிச்சவன். பட், தமிழ் சினிமா மிஸ்டு ஹிம். அவனுக்கான மரியாதை இங்கே கிடைக்கலையேங்கிற ஆதங்கம் எனக்கு இப்பவும் உண்டு.

காதல் ஓவியம் படத்துக்கு அப்புறம் வேற படத்துல நடிக்க அவனும் முயற்சி செய்யலை. ஒரு சினிமால ஹீரோவா நடிச்சோம்ங்கறதையே மறந்துட்டு, இப்போ அமெரிக்காவி; கார்மென்ட் பிசினஸ் பண்ணிட்டு இருக்கான்…
என்கிறார்.

இப்படத்தில் கவுண்டமணி, ஜனகராஜ், ராதாரவி, அர்ச்சனா, மணிவண்ணன், வெள்ளாய் சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top