Connect with us

Cinema History

எனக்கு கவர்ச்சியா ஆட தெரியாது சார்!- ஹீரோயினுக்கு இடுப்பை பிடித்து டான்ஸ் சொல்லி கொடுத்த பாக்கியராஜ்!..

கோலிவுட் சினிமாவில் ஒவ்வொரு இயக்குனர்களுக்கும் அவர்களுக்கென்று ஒரு காலம் இருக்கும். அந்த சமயத்தில் அவர்கள் பிரபலமானவர்களாக இருந்திருப்பார்கள். அப்படியாக தமிழ் சினிமாவில் பெரும் பிரபலமான இயக்குனராக இருந்தவர்தான் பாக்கியராஜ்.

பாக்கியராஜ் நடிக்கும் படங்கள், மற்றும் அவர் இயக்கும் திரைப்படங்கள் அனைத்துமே அவருக்கு பெரும் ஹிட் கொடுத்து கொண்டிருந்தன. அந்த காலக்கட்டத்தில் பாக்கியராஜ் வயது வந்தவருக்கான டபுள் மீனிங் நகைச்சுவை காட்சிகளுக்காக பிரபலமடைந்தார்.

பாக்கியராஜ் இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் இது நம்ம ஆளு. வெளிவந்த சமயத்தில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படம். நடிகை ஷோபனா அப்போதுதான் தமிழில் ஓரிரு திரைப்படங்களில் நடித்திருந்தார்.

நடனமாட கற்றுத்தந்த பாக்கியராஜ்:

இந்த நிலையில் இது நம்ம ஆளு திரைப்படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இது நம்ம ஆளு திரைப்படத்தில் நான் ஆளான தாமரை என்னும் பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடலுக்காக கதாநாயகி சற்று கவர்ச்சியாக ஆட வேண்டி இருந்தது.

எனவே இந்த விஷயத்தை நடிகை ஷோபனாவிடம் தெரிவித்துள்ளார் பாக்கியராஜ். அதற்கு ”சார் எனக்கு அவ்வளவாக கவர்ச்சியா ஆட தெரியாது சார்” என கூறியுள்ளார் ஷோபனா. அதன் பிறகு பாக்கியராஜ் சில இடுப்பு நடன முறைகளை சொல்லி தந்துள்ளார்.

இதுதான் கவர்ச்சி நடனமா? என சந்தேகமாக ஆடியுள்ளார் ஷோபனா. ஆனால் திரையில் பாடலாக வரும்போது அது கவர்ச்சி நடனமாகவே அமைந்துள்ளது. அதை கொண்டுதான் கவர்ச்சியாக நடிப்பது எப்படி என்பதை கற்றுக்கொண்டதாக ஷோபனா கூறியுள்ளார்.

google news
Continue Reading

More in Cinema History

To Top