இதுதான் Breaking.! ரஜினி - நெல்சன் புதுப்பட போஸ்டர் ரெடி.! அதிர்ச்சியில் கோலிவுட்.!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி ஒரு அறிமுகம் தேவையில்லை அந்த அளவுக்கு இந்திய சினிமாவில் உச்சம் தொட்ட நடிகர் என்றால் அவர்தான். தற்போதைய நடிகர்கள் ஒரு ஹிட் கொடுத்து அடுத்த படம் ஹிட்டாக வேண்டும் என்று வருடக்கணக்கில் காத்திருந்து கதைகள் தேர்வு செய்து நடித்து வருகின்றனர்.
இவரது நடிப்பில் இறுதியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதனால், தனது அடுத்த படத்தை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் ரஜினி. பல இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
இந்நிலையில், ஒருபக்கம், சன் பிக்சர்ஸ் நிறுனம் தயாரிக்கும் ரஜினியின் அடுத்த படத்தை டாக்டர் மற்றும் பீஸ்ட் பட இயக்குனர் நெல்சன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில், இந்த தகவல் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஆம்.. இணையத்தில் இது தொடர்பாக நெல்சன் மற்றும் ரஜினியும் எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நெல்சன் இயக்கத்தில் ரஜினி தனது 169 படத்தில் நடிக்கவுள்ளார். மேலும், இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைப்பார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- இதென்ன புதுசா இருக்கு.?! விஜய் சேதுபதி படத்திற்கு குவியும் கோடிகள்.!
தற்போது, இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் துவங்கும் எனவும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இந்த புதிய படத்தின் போஸ்டர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால், டிவிட்டரில் #Thalaivar169 என்கிற ஹேஷ்டேக் டிவிட்டரில் டிரெண்டிங் ஆகி வருகிறது.