பலே ஆளுப்பா நீ!. தெறிக்கவிட்ட ஜி.வி.பிரகாஷ்.. சியான் செஞ்ச வேலைய பாருங்க!..
GV Prakash: சீயான்62 படத்தின் வாய்ப்பு கிடைத்த சுவாரஸ்ய கதையை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பகிர்ந்து இருக்கிறார். அந்த விஷயம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் வைரலாகி வருகிறது.
பெரிய இசை குடும்பத்தில் இருந்து வந்தாலும் கஷ்டப்பட்டு வாய்ப்பை தேடிக்கொண்டவர் ஜிவி பிரகாஷ். வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் மிகப்பெரிய ஹிட்டான நிலையில் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதையும் படிங்க: வீடு வாங்கியும் நிறைவேறாம போன ஆசை!.. ரஜினிக்குள்ள இன்னும் அந்த சோகம் இருக்காம்!…
அடுத்து மதராசப்பட்டினம், ஆடுக்களம், ஆயிரத்தில் ஒருவன் என ஜிவி இசையமைத்த படங்கள் எல்லாமே ஹிட் ரகம். இதனால் பெரிய இசையமைப்பாளராக கோலிவுட்டில் ஜிவி வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நடிகராகவும் களமிறங்கினார்.
தொடர்ந்து நடிப்பையும், இசையமைப்பையும் ஒரு சேர செய்து வருகிறார் ஜிவி பிரகாஷ். தற்போது விக்ரமின் தங்கலான், தனுஷின் கேப்டன் மில்லர். கங்கனாவின் எமர்ஜென்சி, சூர்யா 43, சிவகார்த்திகேயன் 21 படங்களுக்கு இசையமைக்க இருக்கிறார்.
இதையும் படிங்க: நிம்மதியே இல்ல! இப்படி நடக்கும்னு நினைக்கவே இல்ல - வேதனையை வீடியோ மூலம் பகிர்ந்த ஜி.பி.முத்து
இதில் தங்கலான் படத்தின் இசையை சமீபத்தில் ஜிவி முடித்து விட்டாராம். அதை கேட்ட விக்ரம் மிரண்டு போய்விட்டாராம். உடனே ஜிவிக்கு அழைத்து 30 நிமிஷம் பேசி இருக்கிறார். இதை எப்படி நீங்க செஞ்சீங்க? டீசர் பிஜிஎம் செமையாக இருக்கு என ஜிவியை புகழ்ந்தாராம்.
தங்கலான் படத்தில் விக்ரமை அசத்திய ஜிவியே தான் தன்னுடைய அடுத்த படமான 62க்கு இசையமைக்க வேண்டும் என அவரே இயக்குனரிடம் கேட்டு ஓகே வாங்கினாராம். அதை தொடர்ந்தே எஸ்.யூ.அருண்குமார் இயக்கும் படத்தில் ஜிவி இணைந்ததாக தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறார்.