கமல் செட்டில் இப்படித்தான் நடந்து கொள்வார்..!வெளிப்படையாக பேசிய பிரபல நடிகை..!

kamal
நடிகர் திலகம் சிவாஜி தொடர்ந்து தமிழ் சினிமாவில் நடிப்புக்கான இலக்கணத்தை எழுதியவர் கமல்ஹாசன். தன்னுடைய படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு படம் தன்னை வேறுபடுத்தி காட்டுவது இவரது தனிச்சிறப்பு. நீண்ட நாட்கள் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த விக்ரம் திரைப்படம் இவருக்கு தமிழ் சினிமாவில் வரலாறு காணாத வெற்றியை பதிவு செய்தது.

kamal 2
இதனைத் தொடர்ந்து இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 மற்றும் பிரபாஸுடன் ப்ராஜெக்ட் கே மற்றும் இயக்குனர் எச் வினோத் படம் என்று வரிசை நீண்டு கொண்டே செல்கிறது. படங்களில் நடிப்பது மட்டுமின்றி அரசியலிலும் தனது பங்களிப்பை அளித்து வருகிறார்.

sathya movie
நடிகனாக சிறந்து விளங்கினாலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் எப்பொழுதும் கிசுகிசுக்களில் சிக்குவதில் தவறியதில்லை கமல். பல நடிகைகளுடன் நடித்தாலும் நடிகை அமலா இவரைப் பற்றிய உண்மையை கூறியுள்ளார். இயக்குனர் சுரேஷ் கிருஷ்ண இயக்கத்தில் 1988 ஆம் ஆண்டு கமல் கமல் நடித்து வெளிவந்த திரைப்படம் சத்யா இதில் கமலுக்கு ஜோடியாக அமலா நடித்திருப்பார்.

kamal with amala
”வளையோசை கலகலவென ”என்ற பாடலின் மூலம் தமிழ்நாட்டில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர். இப்படத்தில் நடக்கும் போது படப்பிடிப்பு தளத்தில் தனக்கு நடந்த அனுபவங்களை பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பு நடக்கும் பொழுது ”கமல் தன் கதாபாத்திரத்திற்கு மட்டுமல்லாமல் என்னுடைய கதாபாத்திரத்திற்கும் அதிக ஈடுபாடை கொண்டிருப்பார். அவர் ஒரு சினிமா கலையின் பல்கலைக்கழகம்” என்றும் கூறியுள்ளார்.

amala
”எனக்கு க்ளோசப் ஷாட்கள் எடுக்கும்போது அவர் செல்லாமல் கேமரா பின்னால் அமர்ந்து முகபாவனை எப்படி வெளிப்படுத்த வேண்டும் செய்து காட்டுவார். நான் பிலிம் இன்ஸ்டிடியூட் போனதில்லை ஆனால் கமல்தான் எனக்கு சினிமாவின் யுனிவர்சிட்டி கமல் தான்” என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.