இப்படி தான் சாகனும்னு பிரதாப் போத்தன் ஆசைப்பட்டார்... உண்மையை போட்டுடைத்த அஜித் பட நாயகி...

தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து பிரபலமான நடிகர் பிரதாப் போத்தன், தனது 70வது வயதில் சென்னையில் உள்ள அவரது அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை காலமானார். பிரதாப் மறைவு செய்தி வெளியானவுடன், சமூக வலைதளத்தில் பல பிரபலங்கள் தங்களது அதிர்ச்சியையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, மறைந்த நடிகருக்கு தமிழ் மற்றும் மலையாள திரையுலகைச் சேர்ந்த பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், பிரதாப் போத்தனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை கனிகா பின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அந்த வகையில், செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், 'பிரதாப் போத்தன் சார், மிகப்பெரிய இயக்குனர். எனக்கு நல்ல நண்பரும் கூட... மலையாளத்தில் அவருடன் இணைந்து இரண்டு, மூன்று படங்களில் நடித்துள்ளேன். இப்போது மலையாள நடிகர்கள் சங்கம் சார்பாக அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தேன்.
இதையும் படிங்களேன் - லைட் ஆஃப் பண்ணிட்டா எல்லாம் ஒண்ணுதான்… ரெம்ப ஓபனாக பேசிய பிரபல சீரியல் நடிகை…
மேலும் அவர் பேசுகையில், அவர் ஒருமுறை என்னிடம் ஒன்று சொல்லியிருக்கிறார், அதாவது, இறப்பு என்று ஒன்று வந்தால் எனக்கு தூக்கத்திலேயே உயிர் போக வேண்டும். அது தான் என் ஆசை என்று அவர் சொன்னார், அதேபோல் சார் விருப்பப்பட்ட மாதிரி இறந்துட்டாரு என நடிகை கனிகா வருத்தம் தெரிவித்தார்.