இது சரியில்லை.. ரிலீஸுக்கு முன்னரே கணித்த விஜய்.. ஸ்லிப் ஆகிய லோகேஷ் கணக்கு..! பேச்ச கேட்ருக்கலாம்..!

Published On: October 29, 2023
| Posted By : Akhilan

Leo Movie: விஜய் நடிப்பில் வெளியாகி இருக்கும் லியோ படத்தில் நிறைய சர்ச்சைகள் இன்னமும் கூட வலம் வரும் நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ஒரு தகவலால் விஜய் ரசிகர்கள் தற்போது லோகேஷ் கனகராஜ் மீது கடும் கோபமாகி இருக்கின்றனர்.

விஜய், த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மடோனா செபஸ்டியன் ஆகியோர் நடித்திருந்த திரைப்படம் லியோ. இப்படத்தினை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித்குமார் தயாரித்து இருந்தார். படத்திற்கு அனிருத் இசையமைத்தார்.

இதையும் படிங்க: ஹாஸ்பிடலில் நடந்த மெடிக்கல் மாஃபியா! ஒரு ட்ரையலுக்கு 25 லட்சமா? விக்ரமன் மனைவிக்கு நடந்த அநியாயம்

படத்தின் முதல் அறிவிப்பில் இருந்து ரிலீஸாக வசூல் நிலவரம் வரை எல்லாமே பிரச்னையாக தான் போய்க் கொண்டு இருக்கிறது. இதில் விஜய் படத்துக்கான ஸ்பெஷலே ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி தான். அதுவும் இதில் இல்லை என்பதால் ரசிகர்கள் கூடுதல் வருத்தத்தில் இருக்கின்றனர்.

படத்துக்கு எக்கசக்க எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்புகளை லோகேஷால் பூர்த்தி செய்யவே முடியாமல் போக படமும் விமர்சனத்துக்கு அதிகமாகவே உள்ளானது. இதில் லியோ தாஸின் ப்ளாஷ்பேக் வேறு சரியில்லை என பலரும் பேசி வருகின்றனர். அதிலும் முதல் பாதியாவது பரவாயில்லை.

இதையும் படிங்க: இனி ரஜினியுடன் இணைய வேண்டாம்.. கமல் முடிவுக்கு பின்னால் இப்படி ஒரு முடிவு இருக்கிறதாம்..!

இந்நிலையில் தற்போது கசிந்து இருக்கும் ஒரு தகவலில் இரண்டாம் பாதி விஜயிற்கே பிடிக்கவில்லை. நிறைய இடங்களில் எடிட் தேவைப்படுகிறது. எடிட்டரிடம் அதை சரி செய்ய சொல்லி இருக்கிறார் விஜய். ஆனால் லோகேஷ் இல்லை இல்லை எல்லாம் சரியாக இருக்கிறது. அப்படியே ரிலீஸ் செய்யலாம் என்றாராம். பேச்சை கேட்ருக்கலாம் பாஸ் என இப்போது விமர்சிக்கப்பட்டு வருகிறார்.