“திருமண வாழ்க்கையை பற்றி பேச தொடங்கியதும்..” – பிரியங்கா குறித்து பயில்வான் ரங்கநாதன் பகீர் தகவல்!

Published On: April 17, 2025
| Posted By : Giri

பிரியங்கா தேஷ்பாண்டே இரண்டாவது கல்யாணம் முடித்தாலும் முடித்தார் சினிமா உலகில் அதே பேச்சு தான். ஏற்கனவே, பிரவீன் என்பவரை காதலித்து திருமணம் செய்து விவாகரத்து செய்தார் பிரியங்கா. இந்த நிலையில் தான் நேற்று டிஜே வசி என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். வசி தொழில்முறை டிஜேவாக பணியாற்றி வருகிறார். பல கார்பரேட் நிகழ்ச்சிகளிலும் பப்புகளிலும் டிஜேவாக பணியாற்றிய இவர், ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனியையும் நடத்தி வருகிறார்.

அப்படியாக ஒரு நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கும் டிஜே வசிக்கும் இடையே அறிமுகம் ஏற்பட, பின்னர் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது. பின்னர் இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். 32 வயதாகும் பிரியங்கா தன்னை விட 10 வயது மூத்தவரான 42 வயதாகும் டிஜே வசியை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில், இது குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பயில்வான் ரங்கநாதன் அளித்துள்ள பேட்டியில், பிரியங்கா விஜய் டிவியில் தொகுப்பாளராக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். பிரியங்கா தேஷ்பாண்டே என்ற பெயரை கேட்டதும் வட இந்திய பெண் என்பது நமக்கு தெரியும்.

பிரியங்கா அம்மாவிற்கு செல்ல பிள்ளை, அவர் சொன்னதை அப்படியே கேட்பார். விஜய் டிவியில் வேலை செய்தபோது, அதே நிறுவனத்தில் பணியாற்றிய தயாரிப்பாளர் சாதிக் என்ற இஸ்லாமியரை காதலித்து, திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடால் பிரிந்தனர்.

பிரியங்கா சாணக்கியமாக சிரித்துக்கொண்டே விஷ ஊசி போடுவதில் திறமையானவர், சிண்டுமுடிவதிலும் திறமையானவர். நான் அவரை இரண்டு மூன்று முறை நேரடியாக சந்தித்திருக்கிறேன். அவர் கொஞ்சம் குசும்பான பார்ட்டி, அதை டீல் செய்ய நான் குசும்புத்தனமாகவே அணுகினேன்.

அவர் ஒரு அடி தாண்டினால், நான் பத்து அடி தாண்டுவேன். ஒருமுறை என்னை பற்றி ஏதேனும் கிசுகிசு இருந்தால் சொல்லுங்கள் என்றார். அப்போது நான் அவருடைய திருமண வாழ்க்கையை பற்றி பேச தொடங்கினேன். உடனே போதும், மன்னித்து கொள்ளுங்கள் என்று அவர் சென்றுவிட்டார் என அந்த பேட்டியில் தெரிவித்தார். எது எப்படியோ உண்மை எதுவென்று பிரியங்கா கூறினாலே தெரியவரும்.