டோன்ட் டச் மீனு சொல்லிட்டு எப்படி கட்டிபிடிச்சாரு? அஜித் யோகிபாபு விஷயத்தில் நடந்தது என்ன?
Ajith Yogibabu: இன்று சமூக வலைதள பக்கத்தில் மிகவும் வைரலாகி வருவது யோகிபாபு பற்றிய செய்தி தான். அதுவும் வலைப்பேச்சு அந்தணன் மற்றும் பிஸ்மி கூறிய தகவல் அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அஜித் தன்னை டச் பண்ணக்கூடாது என யோகிபாபுசொன்னதாகவும் வலைப்பேச்சில் பிஸ்மி இன்று கூறியிருக்கிறார்.
இந்த ஒரு செய்திதான் தீயாய் பரவி வருகிறது. உண்மையில் அஜித்திற்கும் யோகிபாபுவிருக்கும் இடையே என்னதான் நடந்தது என்பதை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். அதற்கு முன் யோகிபாபுவை பற்றி இப்படி ஒரு தகவல் வெளிவர காரணமாக இருந்த சம்பவம் பற்றியும் இந்த செய்தியில் நாம் பார்க்க இருக்கிறோம்.
இதையும் படிங்க: கோட் படம் சந்தித்த சவால்கள்… வெற்றியை கொடுக்குமா?.. பீஸ்ட் மாதிரி ஆயிடக்கூடாதுப்பா!..
அதாவது சினிமாவில் நடக்கும் சம்பவங்கள் புது புது படங்களின் அப்டேட்டுகள் என நாள்தோறும் தனது யுடியூப் சேனல் மூலம் கொடுத்து வருபவர்கள் தான் வலைப்பேச்சில் இருக்கும் பிஸ்மி, அந்தணன் மற்றும் சக்தி. அப்படி ஒரு முறை இயக்குனர்களை யோகி பாபு மிகவும் டார்ச்சர் செய்வதாகவும் பணத்தை வாங்கிக் கொண்டு கால்ஷீட் கொடுக்காமலும் டார்ச்சர் பண்ணுவதாகவும் கூறியிருந்தார்கள்.
அதையும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் சொன்னதின் பேரில் தான் வலைப்பேச்சில் கூறியிருக்கிறார்கள். ஆனால் இதைப் பற்றி யோகி பாபு ஒரு பேட்டியில் கூறும்போது ‘என்னைப் பற்றி ஏதேதோ சொல்கிறார்கள். அதனால் அவர்களுக்கு போன் செய்து ஏன் இப்படி எல்லாம் பேசுகிறீர்கள்? தவறான செய்தியை ஏன் பரப்புகிறீர்கள் எனக் கேட்டபோது எங்களைத்தான் கவனிக்கவே இல்லையே. கவனித்தால் இந்த மாதிரி நெகட்டிவாக நாங்கள் பேச மாட்டோம்’ என கூறியதாக யோகி பாபு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கோட் படத்துக்கு பெரிய புரொமோஷனாகும் 4வது சிங்கிள்… சங்கீதாவுக்கும் சர்ப்ரைஸ்
இந்த ஒரு சம்பவம் தான் பிஸ்மி அந்தணனை கோபத்தின் உச்சிக்கே செல்ல வைத்திருக்கிறது. அந்த மாதிரி நாங்கள் பணம் கேட்கவே இல்லை. இப்படி கூசாமல் பொய் சொல்கிறாரே யோகி பாபு. அவர் தெய்வத்திற்கும் மேலாக நினைக்கும் முருகன் மீது சத்தியம் பண்ண சொல்லி கேளுங்கள். நாங்கள் இப்படி பேசினோமா என்று அல்லது அவர் குழந்தை மீது சத்தியம் பண்ணி சொல்ல சொல்லுங்கள் என்றெல்லாம் கோபத்தில் பொங்கி எழுந்தனர் அந்தணனும் பிஸ்மியும்.
இந்த கோபத்தின் உச்சம் தான் யோகி பாபுவை பற்றி யாரும் அறிந்திடாத அவர்களுக்கு மட்டும் தெரிந்த விஷயத்தை இன்று போட்டு உடைத்தனர். அதாவது ஒரு பெரிய நடிகர் யோகிபாபுவை டோன்ட் டச் மீ என சொன்னதாகவும் இதைப் பற்றி வலைப்பேச்சில் நீங்களே சொல்லுங்கள் என யோகி பாபு கூறியதாகவும் பிஸ்மி கூறி இருந்தார்.
இதையும் படிங்க: சூரியை காலி செய்த மாரி!.. வாழை அடித்த அடியில் காணாமல் போன கொட்டுக்காளி..
அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பில் அஜித் தன்னை மோசமாக நடத்துகிறார் என்றும் யோகி பாபு முன்பு சொல்லி இருக்கிறாராம். இன்று அதை எல்லாவற்றையும் வலைப்பேச்சி போட்டு உடைத்து விட்டனர் அந்தணனும் பிஸ்மியும். அதனால் டோன்ட் டச் மீ என சொன்ன நடிகர் அஜித் தான் என்றும் அந்த அளவுக்கு தீண்டாமையை கடைப்பிடிக்கிறாரா என்றெல்லாம் அஜித்தை பற்றி பேச ஆரம்பித்து விட்டனர்.
அதே சமயம் யோகி பாபுவே அஜித்தை பற்றிய கூறிய ஒரு செய்தி இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது. எப்படியாவது அஜித் விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டாராம் யோகி பாபு. அதனால் வேதாளம் படத்தில் ஒரு சின்ன சீனில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் நடித்தும் விட்டாராம்.
இதையும் படிங்க: டோன்ட் டச் மி!.. கையை பிடித்த கமெடி நடிகரிடம் கோபப்பட்ட தல!.. இப்படிப்பட்டவரா அஜித்!..
அப்போது அஜித் அவரை கட்டிப்பிடித்து அன்பை பரிமாறினாராம். அஜித் தன்னை கட்டி பிடித்ததும் ஏதோ என்னை அறியாமல் ஒரு சந்தோஷம் என யோகி பாபு அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் அஜித் அடிப்படையில் ஒரு இயல்பான மனிதர். நன்கு பேசக்கூடியவர். பழகக் கூடியவர் என்றெல்லாம் புகழ்ந்து பேசி இருக்கும் யோகி பாபுவின் வீடியோ தான் இப்போது வைரல் ஆகி வருகின்றது. அதனால் டோன்ட் டச் மீ என சொன்னவர் எப்படி தானாக வந்து கட்டி பிடித்திருக்க முடியும்? இதில் யார் சொல்வது உண்மை பொய் என தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட்களை அள்ளி விட்டிருக்கின்றனர்.