Categories: Entertainment News latest news

இது சந்தானத்தின் புது ஸ்டைல்.! முடிச்சிட்டுதான் பேசுவோம்.!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக இருந்து பின்னர் சில காரணங்களால் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார். நடிகர் சந்தானம் காமெடியாக நடித்த காலத்தில் அவர் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வந்தார் ஆனால் தற்போது ஹீரோவாக நடித்து அவரும் ஒரு ஹீரோ எனும் அளவிற்கு தனது மார்க்கெட்டை தக்க வைத்து வருகிறார்.

சந்தானத்தின் நடிப்பில் உருவாகும் அனைத்து திரைப்படங்களும் படத்தின் பெயர் அறிவிக்காமல் அந்தப் படத்தின் சூட்டிங் எடிட்டிங் என மொத்த வேலையும் முடிந்து படம் ரிலீஸ் செய்யும் சமயத்தில் மட்டும்தான் அந்த படத்தின் பற்றிய அறிவிப்பை சந்தானம் வெளியிடுகிறார்.

அப்படித்தான் சந்தானத்தின் அண்மைகால திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் முழுவதும் முடிந்து விட்டது. தற்போது ரிலீஸுக்கு ரெடியாகும் நேரத்தில்தான் அந்த படத்தின் அறிவிப்பு மட்டும் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்களேன் … எனது அமெரிக்க விசாவிற்கு இவர்தான் காரணம்.! உண்மையை உளறிய கொட்டிய ஷங்கர்.!

அதேபோல சந்தானத்தின் நடிப்பில் அடுத்தடுத்து சில படங்கள் தயாராகி விட்டனவாம். மேயாத மான் திரைப்படத்தை இயக்கிய ரத்தினகுமார் இயக்கத்தில் ஒரு படமும் ,விக்ரம் ஐ படத்தை இயக்கிய கார்த்திக் யோகி இயக்கத்தில் ஒரு திரைப்படமும்  முடிக்க உள்ளாராம். அந்த படத்தின் மொத்த வேலை முடிந்த பின்னர்தான் படத்தினை பற்றி அறிவிப்பார்.

ஆம்..வழக்கமாக ஒரு படத்தின் பூஜை போடும் போது அப்படத்தின் இயக்குனர் நடிகர், நடிகை என அனைத்து விவரங்களும் வெளியாகி விடும். ஆனால், சந்தானத்தின் ஸ்டைல் வேறு மாதிரியாக உள்ளது. படத்தின் மொத்த வேலையும் முடிந்த பின்னர்தான் படத்தின் அறிவிப்பு வெளியாகிறது.

Published by
Manikandan