பெண் வெளியில் சொல்ல முடியாத அந்த தவிப்பு... அற்புதமான சுகங்களைத் தந்த 80ஸ் மெலடி இதுதான்!

by sankaran v |
80s hits
X

80s hits

ஒரு பெண் தனக்குள் ஏற்பட்டுள்ள ஆனால் வெளியே சொல்ல முடியாத தவிப்புகள்... இதைப் பாடலாக்கினால் எப்படி இருக்கும்? வாங்க அது எநதப் பாடல்? எந்தப் படம்னு பார்ப்போம்.

1983ல் கே.விஸ்வநாத் இயக்கத்தில் வெளியான சூப்பர்ஹிட் வெள்ளி விழா படம் சலங்கை ஒலி. உலகநாயகன் கமல், ஜெயப்பிரதா நடித்துள்ளனர். படம் முழுவதும் பரதநாட்டியத்திற்காகவே எடுக்கப்பட்டது. கமலின் அபார நடனம் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது. அந்தப் படத்தில் ஒரு ரம்மியமான அமைதியைத் தரும் அழகான பாடல் இது. மௌனமான நேரம் என்ற இந்தப் பாடல் அந்நாட்களில் வானொலிப்பெட்டிகளில் ஒலிக்காத நாளே இல்லை எனலாம்.

இந்தப் பாடலை எழுதியவர் வைரமுத்து. இசை அமைத்தவர் இளையராஜா. பாடலைப் பாடியவர்கள் எஸ்.பி.பி., ஜானகி குழுவினர். பாடல் ஆரம்பிக்கும்போது வரும் ஹம்மிங்கே நம்மை எங்கோ கொண்டு போய்விடும்.

Salangai Oli

Salangai Oli

மௌனம், நிசப்தம், அமைதி, பேரமைதி என எல்லாமே இந்தப் பாடலுக்குள் அடங்கிவிடும். பாடலில் கதாநாயகி ஜெயப்பிரதாவின் நடிப்பு நம்மை சொக்க வைத்து விடும். அதிலும் தேரின் அருகில் கமலும், ஜெயப்பிரதாவும் பார்வைகளால் மாறி மாறி அம்பு எய்துவது உணர்ச்சிகளின் கொப்பளிப்பு என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க...என்னால அவர் எதிர்காலம் பாதிக்கக் கூடாது.. விஜய் நடிக்க மறுத்த திரைப்படம்..

மௌனமான நேரம் இளமனதில் என்ன பாரம் மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள் ஏன் என்று கேளுங்கள் என பல்லவி ஆரம்பிக்கிறது. அதே போல இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ, குழம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ, குளிக்கும் ஓர் கிளி, கொதிக்கும் நீர் துளி ஊதலான மார்கழி, நீளமான ராத்திரி நீ வந்து ஆதரி என்ன ஒரு ரைமிங்கான வார்த்தைகள்...

அந்த அற்புதமான உணர்வில் மனம் லயித்து விடுகிறது. அதே போல அடுத்த சரணத்தில் இவளின் மனதில் இன்னும் இரவின் மீதமோ, கொடியில் மலர்கள் குளிர் காயும் நேரமோ, பாதை தேடியே, பாதம் போகுமோ, காதலென்ன நேசமோ, கனவு கண்டு கூசுமோ, தனிமையோடு பேசுமோ என கவிஞர் காதலின் உணர்வுப்பூர்வமான விஷயங்களை அனுபவித்து எழுதியிருக்கிறார்.

Next Story