Cinema History
தமிழ் சினிமாவில் அதிக வசூலை அள்ளிய முதல் படம் இதுதான்!… அப்பவே இவ்வளவு தொகையா?..
தமிழ்த்திரை உலகம் பல விசித்திரமான சம்பவங்களை சந்தித்துள்ளது. தற்போது முன்னணி நடிகர்களின் படங்கள் தான் வசூலை வாரிக்குவிக்கின்றன. தற்போது ரஜினி, கமல், விஜய் படங்களுக்குள் போட்டி நிலவி வருகிறது. ஜெயிலர், விக்ரம், லியோ படங்களின் வசூலைக் கவனித்தால் இது தெரியவரும். பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடிக்கும் படங்கள் தான் வசூலையும் வாரிக்குவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் படம் வெளியாகும் முன்பே வசூலை வாரிக்குவித்து விடுகின்றன. அந்த வகையில் தமிழ்சினிமா உலகில் முதன் முதலாக அதிக வசூலைக் குவித்த படம் எது என்று பார்ப்போம்.
தமிழ்ப்பட உலகில் முதன் முதலாக அதிக வசூலை வாரிக் குவித்த படம் மங்கம்மா சபதம். ரஞ்சன், வைஜெயந்திமாலாவின் தாயார் வசுந்தராதேவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஆச்சாரியார் இயக்கியுள்ளார். எஸ்எஸ்.வாசன் தான் இந்தப் படத்தைத் தயாரித்தார்.
ரஞ்சனை முதன் முதலாக சினிமா உலகில் அறிமுகமாகும் சமயத்தில் அவரது தந்தை முட்டுக்கட்டை போட்டாராம். என் மகன் படித்து பெரிய டாக்டராக வர வேண்டும் என்பது தான் எனது ஆசை என்றாராம். அதைக் கேட்டதும் ஆச்சாரியார் மற்றும் அவரது உதவி இயக்குனர் வேப்பத்தூர் கிட்டு ஆகியோர் ரஞ்சனின் அப்பாவை சமாதானம் சொல்லி சம்மதிக்க வைத்தார்களாம்.
இவ்வளவுக்கும் படத்தில் ரஞ்சன் ஹீரோ அல்ல. வில்லன். சசாங்கன் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். முதல் படத்திலேயே ரஞ்சன் அபாரமாக நடித்து இருந்தார். அதனால் பலரும் பாராட்டத் தொடங்கினர். அதன் மூலம் தான் ரஞ்சனுக்கு மங்கம்மா சபதம் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததாம்.
படத்தில் ஆச்சரியா ஒரு விஷயத்தை உன்னிப்பாகக் கவனித்து கவனித்து எடுத்தாராம். அதனால் தான் அந்தப் படம் அப்பவே மாஸ் காட்டியதாம். அது என்னன்னா அதுதான் காதல் காட்சி. மிகவும் நெருக்கமாக அந்தக் காட்சிகள் படமாக்கப்பட்டதாம். அதே நேரம் இந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்புகளும் வந்ததாம். இருந்தாலும் படம் அப்பவே 40 லட்சம் வரை வசூலை வாரிக்குவித்து விட்டதாம். இதுதான் அதிக வசூலைப் பெற்ற முதல் தமிழ்ப்படம் என்கிறார் பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன்.
1969ல் வெளியான அடிமைப்பெண் படம் அப்போது இரண்டரை கோடி ரூபாய் வசூலித்ததாம். அது இப்போதுள்ள காலத்திற்கு 1200 கோடிக்கும் அதிகமான தொகைக்குச் சமம் என்கிறார்கள். அப்படி என்றால் 1943ல் வெளியானது தான் இந்தப் படம். அப்பவே 40 லட்சம் வசூல்னா இப்போ எவ்வளவு தொகைக்குச் சமம்னு பார்த்துக்கோங்க.