விஜயா? அஜித்தா? ஒரே நேரத்தில் மூன்று படம் ரிலீஸாகி மூன்றுமே ஹிட்டான படங்கள் இதுதான்..

by Rohini |
vjiayajith
X

vjiayajith

இப்பொழுதெல்லாம் சினிமாவில் பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆகிறது என்றால் மற்ற சிறிய படங்கள் வருவதில் சிக்கல் ஏற்படுகிறது. பெரிய நடிகர்கள் என்றால் மக்கள் அந்த படங்களைத்தான் பார்க்க ஆர்வம் காட்டுவார்கள். சின்ன பட்ஜெட் படங்கள் மீது அவர்களின் கவனம் திரும்பாது என்ற வகையில் ஏராளமான நல்ல கதையம்சத்தோடு கூடிய படங்களை ரசிகர்கள் மிஸ் செய்து விடுகின்றனர்.

ஆனால் கொஞ்சம் திரும்பி பார்த்தால் ஒரே நேரத்தில் பல முன்னணி நடிகர்களின் படங்கள் ஒன்றாக ரிலீஸாகி இருக்கின்றன. இப்போது ரஜினி படம் ரிலீஸானால் விஜய் படமோ அஜித் படமோ அதே தேதியில் ரிலீஸ் செய்ய மாட்டார்கள். ஆனால் 2000களில் அப்படியான சூழ் நிலை இல்லை. விஜய் அஜித் படங்கள் எல்லாம் ஒரே நேரத்தில் ஒன்றாக ரிலீஸ் ஆகியிருக்கின்றன. அப்படி ரிலீஸ் ஆகும் போது எத்தனை படம் ஜெயித்திருக்கின்றன? எத்தனை படம் தோல்வியில் முடிந்திருக்கின்றன என்பதுதான் ரேஸ்.

ஆனால் ஒரு தீபாவளி அன்று விஜய், அஜித் , விஜயகாந்த் ஆகியோரின் படங்கள் ஒன்றாக ரிலீஸாகி மூன்று படங்களுமே சமமான வெற்றிபெற்றிருக்கின்றன. இப்படி ஒரே நேரத்தில் மூன்று படங்கள் ரிலீஸாகி மூன்று படங்களுமே வெற்றியடைந்ததுதான் 2002ஆம் ஆண்டில் மட்டும்தான் என இயக்குனர் வெங்கடேஷன் கூறினார். விஜய் நடித்த பகவதி, அஜித் நடித்த வில்லன், விஜயகாந்த் நடித்த ரமணா போன்ற படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகியிருக்கின்றன.

இப்போது பகவதி படம் எதிர்பார்த்த வசூலை தரவில்லை என்ற ஒரு விமர்சனம் இருக்கிறது. ஆனால் அப்போது திருப்பூர் சுப்பிரமணியன் பகவதி படம் நல்ல வசூலை பெற்றிருக்கிறது என வெங்கடேஷனிடம் கூறினாராம். அதை போல் பகவதி படம் ஒரு பேட்டர்ன், வில்லன் படம் வேறொரு பேட்டர்ன். அஜித் இரட்டை வேடங்களில் நடித்திருப்பார். ரமணா படம் முற்றிலும் வேறுபட்ட கதை.

மூன்று படங்களில் எது அதிக வசூலை பெற போகிறது என்றில்லாமல் சமமான வெற்றியை பெற்றது என வெங்கடேஷன் கூறினார். விஜயகாந்துக்கு ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு மாபெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்த படம்தான் ரமணா. ப்ளாக் பஸ்டர் ஹிட்டான படம். அதை போல் அஜித்துக்கும் நல்ல ஒரு வெற்றியை பதிவு செய்த படம்தான் வில்லன். விஜயை ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக மாற்றிய படம் பகவதி.

Next Story