இதுதான் என்னுடைய கடைசி இண்டர்வியூ! லியோவால் படாதபாடு பட்ட மீசை ராஜேந்திரன் - போதும்டா சாமி

by Rohini |
meesai
X

meesai

Meesai Rajendran: தமிழ் சினிமாவில் பெரும்பாலான படங்களில் போலீஸ் கதாபாத்திரங்களை ஏற்றும் ரவுடியாகவும் நடித்து மக்களின் அபிமானங்களை பெற்ற நடிகர் மீசை ராஜேந்திரன். இப்போது ஒரு சில சீரியல்களிலும் நடித்து வருகிறார்.

இவர் சமீபத்தில் லியோ படம் குறித்து அளித்த பேட்டி இப்போது இவருக்கே எமனாக மாறியிருக்கிறது. ஜெயிலர் பட வசூலை லியோ படம் தாண்டி விட்டால் கண்டிப்பாக என்னுடைய மீசையை எடுத்துவிடுகிறேன் என்று சவால் விட்டிருந்தார்.

இதையும் படிங்க: மீண்டும் மீண்டுமா..! பாக்கியா வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த ராதிகா..! மாலினிக்கு ஷாக் கொடுத்த செழியன்..!

அப்போதிலிருந்தே மீசை ராஜேந்திரன் மீது விஜய் ரசிகர்கள் கடும் காண்டில் இருந்தனர். விஜய் மீது எதுக்கு இவ்ளோ வன்மம்? என மீசை ராஜேந்திரனை பற்றி சமூக வலைதளங்களில் திட்டி தீர்த்து வந்தனர். ஆனால் அது வேற வாய் இது நாற வாய் என்பதை போல் ஒரு படத்தோடு இன்னொரு படத்தை கம்பேர் பண்ணக் கூடாது, நான் அப்படி சொல்லியிருக்க கூடாது என பல்டி அடித்தார்.

இந்த நிலையில் இன்று ஒரு தனியார் சேனலுக்கு பேட்டி அளித்த போது லியோ படம் குறித்து இதுதான் என்னுடைய கடைசி இண்டர்வியூவாக இருக்கும் என மீசை ராஜேந்திரன் கூறினார். அதுமட்டுமில்லாமல் படம் ரிலீஸான பிறகு இவ்ளோ மெனக்கிடும் லியோ படக்குழு ரிலீஸுக்கு முன்பாக மெனக்கிட்டிருந்தால் படம் நன்றாக இருக்கும் அல்லவா? என்ற கேள்வியையும் கேட்டிருக்கிறார்.

இதையும் படிங்க: கலைஞர் அந்த நடிகைக்கு செய்த உதவி! அதே போல் முதல்வர் செய்யமாட்டாரா? மனைவிக்காக முறையிட்ட விக்ரமன்

மேலும் தயாரிப்பாளர் ஹீரோ அரசியலுக்கு வரப்போகிறார். அதனால் வசூலை கொஞ்சம் அதிகமாக சொல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் ஏன் ரசிகர்களிடம் மைன் கேம் விளையாடுகிறீர்கள் என்றும் மீசை ராஜேந்திரன் கூறினார்.

மேலும் மதத்தை பற்றி பேசுகிறேன் என யாரும் தப்பா நினைக்காதீர்கள் என்று சொல்லிவிட்டு எந்தவொரு கிறிஸ்டியனாவது தன்னுடைய பிஸினஸுக்காக நரபலி கொடுக்கனும்னு நினைப்பானா? ஏன் அந்த மதத்தை இப்படி காட்டினீர்கள்? என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதையும் படிங்க: இனிமே இப்படிதான் நடிக்கனும்… விஜய்க்கு ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட சங்கீதா…

நரபலி என்ற பெயரில் பெற்ற பிள்ளையை கொல்லனும்னு துடிக்கும் அப்பா அதன் பின் மருமகளை காப்பாற்றுவதும் இது என் ரத்தம் என்று சொல்லுவதும் லாஜிக்காவா இருக்கிறது என கூறிவிட்டு போதும்டா சாமி என பேட்டியை முடித்துக் கொண்டார்.

Next Story