மணிரத்னம் படத்திற்கு ஏன் இளையராஜா இசையமைப்பதில்லை?.. இப்படி ஒரு பிரச்சினையா?..
திரையுலகில் மணிரத்னம் இளையாஜா ஆகிய இருவருமே அவரவர் துறையில் பெரிய ஜாம்பவான்களாக இருந்து வருகிறார்கள். தொட்டதெல்லாம் ஹிட் என்பதற்கேற்ப இருவரின் வளர்ச்சியும் எட்ட முடியாத அளவில் வளர்ந்துள்ளது.இருவரும் சினிமாவை பொறுத்தவரைக்கும் ஏகப்பட்ட படங்களில் ஒன்றாக பணிபுரிந்திருக்கின்றனர்.
இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவெனில் இருவருடைய பிறந்தநாளும் ஜூன் 2 ஆம் தேதி. முதன் முதலில் மணிரத்னமும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த படம் ஒரு கன்னட திரைப்படமாகும். அப்போது மணிரத்னம் ஒரு போராடிக் கொண்டிருக்கும் இயக்குனர்களின் பட்டியலில் இருந்தார். ஆனால் இளையராஜா அப்பவே சாதனைகளை அடைந்திருந்தார்.
‘பல்லவி அனு பல்லவி’ என்ற கன்னட திரைப்படம் தான் அது. அதன் பிறகு மலையாளத்தில் மணிரத்னத்தின் இரண்டாவது படத்தில் சேர்ந்து பணிபுரிந்தனர். மணிரத்னத்திற்கு தமிழில் முதல் படமாக அமைந்தது ‘பகல் நிலவு’ திரைப்படம். அந்தப் படத்தில் அமைந்த ‘பூ மாலையே ’என்ற பாடல் சொல்ல முடியாத ஹிட்டை பெற்றது.
அதன் பிறகு இருவரும் ‘இதய கோயில்’என்ற திரைப்படத்தில் நான்காவது முறையாக இணைந்தனர். அவர்கள் காம்போவில் வந்த இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனையடுத்து அனைவருக்கும் பிடித்த படமான மௌனராகம் படத்தில் சேர்ந்து பணியாற்றினார்கள். அந்தப் படத்தில் அமைந்த பாடல்கள் எப்பேற்பட்ட வெற்றியை பதிவு செய்தது என அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
தொடர்ந்து நாயகன், அக்னி நட்சத்திரம், கீதாஞ்சலி, அஞ்சலி போன்ற ஹிட் படங்களில் பணிபுரிந்து ஒரு வெற்றிக் கூட்டணியாக தமிழ் சினிமாவில் வலம் வந்தார்கள் மணிரத்னமும் இளையராஜாவும். அதன் பிறகு வந்த படம் தான் ‘தளபதி’. இந்தப் படத்தில் அமைந்த ‘ராக்கம்மா கைதட்டு’ பாடல் இன்று வரை எப்பேற்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என தெரியும். மேலும் இந்த தளபதி படம் இவர்கள் இணைந்த கடைசி படமாக அமைந்தது.
இந்தப் படத்தின் போதே இருவருக்கும் இடையே ஏதோ மனக்கசப்பு இருந்து வந்ததாம். அதன் காரணமாகவே மணிரத்னம் இளையராஜாவை பயன்படுத்தவில்லையாம். அதன் பிறகு தான் ரகுமானின் வரவால் தமிழ் சினிமா வேறொரு போக்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. மணிரத்னம் , ரகுமான் கூட்டணியால் ஒரு புது சினிமாவை மக்கள் ரசிக்க ஆரம்பித்தார்கள். இந்த சுவாரஸ்ய தகவலை சித்ரா லட்சுமணன் கூறினார்.
இதையும் படிங்க : பக்கா ஐயங்கார இருந்த என்னை முருக பக்தனாக மாற்றிய சம்பவம்!.. வாலி விபூதி பூசக் காரணம்..