அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு பின்னால் இப்படி ஒரு அதிர்ச்சியா? பகீர் கிளப்பும் பயில்வான்!..

by Akhilan |   ( Updated:2024-03-11 14:20:53  )
அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் லுக்குக்கு பின்னால் இப்படி ஒரு அதிர்ச்சியா? பகீர் கிளப்பும் பயில்வான்!..
X

Ajithkumar: சமீபத்தில் நடிகர் அஜித்துக்கு மூளையில் பெரிய ஆபரேஷன் செய்ததாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல் கசிந்தது. அதுகுறித்தும் அஜித் குறித்தும் இன்னும் சில அதிர்ச்சி சம்பவங்களையும் பிரபல விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்து இருக்கிறார்.

நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து கொண்டு இருந்தார். ஆனால் திடீரென அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து, மூளையில் ஆபிரேஷன் செய்யப்பட்டதாகவும் இணையத்தில் தகவல்கள் கசிந்தது.

இதையும் படிங்க: எல்லாரும் பாருங்க.. ஃப்ரி ஷோ!.. மாராப்பை விலக்கி அழகை காட்டும் பிரியா ஆனந்த்…

இதனால் ரசிகர்கள் பயந்தனர். அதையடுத்து, அவருக்கு எதுவும் பிரச்னை இல்லை. சாதாரண உடல்நல சிகிச்சை தான். அவருக்கு காதுக்கும், தலைக்கும் இடையில் வீக்கம் இருந்தது. அதற்கான சிகிச்சையே நடந்ததாக அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திரா விளக்கம் கொடுத்து இருந்தார். இந்த விஷயம் குறித்து பேசி இருக்கும் பிரபல திரைவிமர்சகர் பயில்வான் ரங்கநாதன் அஜித்தை ஒருமுறை பார்க்க சென்று இருக்கிறார்.

அப்போது பேசிக்கொண்டு இருக்கையில், ஒரு கை சோறு போல மாத்திரைகளை அள்ளி தினமும் நான் இத்தனையும் சாப்பிடுகிறேன் என கூறினார். மேலும் தனக்கு நோய் இருப்பதையும் அவர் தெரிவித்தார். மேலும் அஜித்துக்கு உடலில் எட்டுக்கும் அதிகமான ஆபரேஷன்கள் நடந்திருக்கிறது. ரஜினிக்கு ஆடத் தெரியாததால் அவரின் டான்ஸ் ஸ்டெப்புகளை கோரியோகிராபர்கள் அவருக்கு ஏற்றது போல அமைப்பார்கள்.

இதையும் படிங்க: கடைசில நாசருமா? வடிவேலு யாரையும் விட்டுவைக்கல போல.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க

அதுபோல உன்னிப்பாக கவனித்துப் பார்த்தால் அஜித் தன்னுடைய உடலை அதிகமாக வளைத்த ஆடக்கூடாது. இதனாலே அஜித்துக்கும் பாதி டான்ஸ்களை நின்ற அளவில் அமைத்து இருப்பார்கள். மேலும் அஜித் பல வருடமாக சால்டன் பேப்பர் லுக்கில் இருப்பதற்கும் அவரின் மருத்துவர்கள் இனி தலையில் டை அடிக்கக் கூடாது என கொடுத்த கண்டிஷன் தான் காரணம் எனவும் தெரிவித்து இருக்கிறார்.

Next Story