கமல் - ஸ்ரீவித்யா காதலை நிராகரிக்க இந்த காரணம் தான் இருந்தது!... ஸ்ரீவித்யா அண்ணி சொன்ன ரகசியம்..
Kamal-Srividya: கமலுக்கும், நடிகை ஸ்ரீவித்யாவுக்கும் காதல் இருந்தது. சமீபத்தில் வைரலான பழைய பேட்டியின் மூலம் பலரும் அறிந்த கதையானது. உண்மையில் என்ன நடந்தது? ஏன் வித்யாவின் தாயாரும், நடிகையுமான விஜயகுமாரி இந்த காதலை நிராகரித்தார் என்பது குறித்து ஸ்ரீவித்யா அண்ணி சில தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
எம்.எல்.விஜயகுமாரிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருந்தனர். இதில் ஸ்ரீவித்யா நடிகையானால் கூட அவர் மகன் சினிமாவில் இருந்து ஒதுங்கியே இருந்தார். ஆனால் அவருக்கும், கமலுக்கும் நெருங்கிய நட்பு இருந்ததாம். குருதி புனல் நடித்து கொண்டு இருந்த போது அவரின் எண்ணெய் கடையை நேராக வந்து திறந்து வைத்தாராம்.
இதையும் படிங்க: யாருப்பா விஜய்யா?.. மாநாடு சிம்புவோன்னு நினைச்சிட்டோம்.. இவருக்கு எதுக்குப்பா டீஏஜிங் தண்டச்செலவு!
தற்போது அவர் இல்லையென்றால் அவர் மனைவி விஜயலட்சுமி இன்னும் பிஸியாகவே இருக்கிறார். ஒரு பக்கம் குடும்பம், ஒரு பக்கம் பிசினஸ் என்று இருந்தவர். தற்போது இந்தியன் ஆடிஷனில் கலந்து கொண்டு அந்த படத்திலும் ஒரு வேடம் ஏற்று நடிப்பதாக தெரிவித்து உள்ளார். இருவருக்கும் காதல் இருந்தது உண்மை தானாம்.
மேலும், அவர் பேட்டியில் இருந்து, என்னுடைய நாத்தனர் அவ்வளோ அழகு. 74 மற்றும் 75ல் நடந்த விஷயம் இது. அபூர்வ ராகங்கள் படத்தின் போது எனக்கு கல்யாணம் ஆகவில்லை. என் கணவர் சொல்லியே எனக்கு தெரியும். என் கணவர் சங்கரும், கமல் சாரும் ரொம்பவே குளோஸ். அடிக்கடி இருவரும் சந்தித்து அரட்டை அடிப்பார்களாம்.
இதையும் படிங்க: மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு என்ன ஆச்சு? ஒருவாரம் ஐசியூ சிகிச்சை!.. என்ன நடந்தது?
ஆனால் அது மட்டும் காரணம் இல்லை. ஸ்ரீவித்யா 1953 ஜூலை 24ல் பிறந்தவள். கமல் சாரோ 1954 நவம்பரில் பிறந்தவர். அதுவும் அங்கு பிரச்சையாக இருந்தது. கிட்டத்தட்ட வித்யா 1.5 வயசு கமலை விட மூத்தவர் என்பதாலும் அவர்கள் காதல் கைக்கூடாமல் போனது. அதன் பின் ஸ்ரீவித்யாவுக்கு நிறைய பெரிய மாப்பிள்ளை வந்தாலும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை எனவும் குறிப்பிட்டு இருந்தார்.