More
Categories: Cinema News latest news

நான் வேண்டாம்! என் பாட்டு மட்டும் வேணுமா? ரஜினியுடனான பழைய பகையை தீர்த்துக் கொண்டாரா?

Rajini Ilaiyaraja: இளையராஜாவின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது பெரும்பாலும் ரஜினி, கமல் படங்களில்தான். இவர்கள் இருவரின் படங்களுக்கும் பல நல்ல நல்ல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து தன்னையும் தன் பாடலையும் தன் இசையையும் மேலும் மெருகேற்றினார் இளையராஜா. இதைப் பற்றி ஒரு மேடையில் ரஜினியே இளையராஜாவிடம் என் படங்களை விட கமல் படங்களுக்கு தான் நீங்கள் நல்ல நல்ல பாட்டை கொடுத்திருக்கிறீர்கள் என செல்லமாக கோபித்துக் கொண்டார்.

அப்படி இருவரின் படங்களுக்கும் போட்டி போட்டுக் கொண்டு தன் இசையால் ரசிகர்களை குதூகலப்படுத்தியவர் இளையராஜா. அவர்கள் இருவர் படங்களையும் தாண்டி எண்பதுகளில் இளையராஜாவின் ஆதிக்கம் தான்  தமிழ் சினிமாவில் கோலோச்சியிருந்தது. அதே வேளையில் அவருடைய புகழ் உயர உயர அவருக்கு இருந்த பக்குவம் குறைய தொடங்கியது என்று தான் சொல்ல வேண்டும்.

இதையும் படிங்க: உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு.. உண்மையை உடைத்த பாக்கியா..

சமீபத்தில் கூட அவருக்கு உண்டான கோபம் அர்த்தமற்றது என பல பிரபலங்கள் கூறி வருகிறார்கள். இவ்வளவு பெரிய மனிதராக ஆன பிறகும் ஏன் ஒரு விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இளையராஜாவிடம் இல்லை என்று தான் கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு அவருடைய பக்குவம் குறைந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். கூலி படத்தில் இப்போது போய்க்கொண்டிருக்கும் பிரச்சினை, இதுபோக பாலச்சந்தர், பாரதிராஜா, வைரமுத்து, ஏ ஆர் ரகுமான் போன்ற திரையுலகில் பெரிய ஜாம்பவான்கள் ஆக இருந்த பல பேரிடம் இவருக்கு மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது.

பாலச்சந்தர் ரோஜா படத்தில் ரகுமானை அறிமுகப்படுத்தியதிலிருந்தே இளையராஜாவுக்கு பாலச்சந்தர் மீது கொஞ்சம் வருத்தம் இருந்ததாக கவிதாலயா கிருஷ்ணா ஒரு பேட்டியில் கூறினார். அதுமட்டுமல்லாமல் அந்த படத்திற்கு பிறகு தொடர்ந்து மூன்று படங்களில் இளையராஜாவை பாலச்சந்தர் பயன்படுத்தவே இல்லை. அதுவும் மேலும் இளையராஜாவின் கோபத்திற்கு காரணமாக அமைந்தது. அந்த படங்கள் வானமே எல்லை, அண்ணாமலை போன்ற படங்கள்.

இதையும் படிங்க: ‘சேது’ படத்தில் ஹீரோயினுக்கு நடந்த அவமானம்! பாலாவின் அறியாத இன்னொரு முகம்

இருந்தாலும் ரஜினியின் படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என ஆரம்பத்தில் இருந்தே ஒரு கருத்து பரவி வந்ததால் அண்ணாமலை படத்திற்கு வேண்டுமென்றால் இளையராஜா இசை அமைக்கட்டும் என தனது மகள் புஷ்பா கந்தசாமி மற்றும் அண்ணாமலை படத்தின் இயக்குனர் இவர்களை இளையராஜாவிடம் போய் பேச சொல்லி இருக்கிறார்.

ஆனால் இளையராஜா ஒத்துக்கவே இல்லையாம். அது மட்டுமல்லாமல் ரஜினியும் பாலச்சந்தருக்கு பிடிக்காதது எதையும் நான் செய்ய மாட்டேன். இளையராஜாவை பாலச்சந்தர் வேண்டாம் என்று சொன்னால் எனக்கும் வேண்டாம் என அண்ணாமலை படத்தில் ரஜினி சொன்னதாகவும் கவிதாலயா கிருஷ்ணா கூறினார். இதிலிருந்தே இன்று வரை ரஜினியின் படங்களுக்கு இளையராஜா இசையமைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அய்யா நீங்க உண்மைய சொல்றதுக்குள்ள காசெல்லாம் மனோஜ் கரைச்சிடுவாரு போலயே!

ஒரு வேளை சமீபத்தில் நடக்கும் கூலி பட பிரச்சினைக்கு கூட இதுதான் காரணமாக இருக்குமோ என்ற ஒரு டாக் கூட போய் கொண்டிருக்கிறது. அன்று என்னை வேண்டாம் என சொன்னார் ரஜினி. ஆனால் இன்று அவர் படத்தில் என் பாட்டு மட்டும் வேண்டுமா என்று கூட இளையராஜா நினைத்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.

Published by
Rohini