இதனால் தான் கமலுடன் நடிக்கவில்லை... ரகசியத்தை உடைத்த நதியா...
எவர்க்ரீன் நடிகையாக வலம் வருகிறார் நதியா. வயது ஆக ஆக இவரின் அழகும் கூடிக்கொண்டே போகிறது. 80ஸ் களில் தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நதியா.
சரீனாவாக இருந்தவர் நதியா. முதல் படமே இவருக்கு பெரிய வரவேற்பை கொடுத்தது. நோக்கிதா டோரது கன்னும் நட்டு என்னும் மலையாள படத்தில் அறிமுகமானார். அங்கு அவருக்கு நதியா எனப் பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தினை பாசில் இயக்கி இருந்தார். மோகன்லால் மற்றும் பத்மினி படத்தில் முக்கிய வேடம் ஏற்று இருந்தனர்.
இப்படத்தினை தமிழில் ரீமேக் செய்தனர். அப்படத்திற்கு பூவே பூச்சுடவா எனப் பெயரிடப்பட்டது. அப்படமும் பிலிம்பேர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் விருது கிடைக்கவில்லை. வாய்ப்புகள் குவிந்தது. தொடர்ச்சியாக தமிழ் மற்றும் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வந்தார்.
ஆனால், புகழின் உட்சத்தில் இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டவர். சினிமாவிற்கு முழுக்கு போட்டார். தனது கணவருடன் வெளிநாட்டி செட்டில் ஆகினார். அவரை தேடி தமிழுக்கு மீண்டும் அழைத்து வந்தது ஜெயம் ராஜா.
இவர் இயக்கத்தில் வெளியான படம் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி. ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தார். அவருக்கு தாயாக நதியா ரீஎண்ட்ரி கொடுத்தார். ஆனால், அப்போது அவருக்கு இளமை குறையாமல் ரவிக்கே டப் கொடுத்தார். இந்த ரீ எண்ட்ரி அவருக்கு மீண்டும் கோலிவுட்டில் நல்ல இடத்தை பெற்று தந்தது.
மீண்டும் தமிழ் மற்றும் மலையாளத்தில் வாய்ப்புகள் வந்தது. அதே வேலையில், தெலுங்கு திரையுலகமும் நதியாவிற்கு பட்டுக்கம்பளம் விரித்தது. அங்கும் அவர் 5 படங்களுக்கு மேல் நடித்து விட்டார். ரீ எண்ட்ரியில் கலக்கி வரும் பிரபலங்களில் முக்கியமானவர். டாப் ஸ்டார்களுக்கு நாயகியாக இருந்த நதியா கமலுடன் மட்டும் நடிக்கவில்லை. இதுகுறித்து நதியாவிடம் ஒரு பேட்டியில் கேள்வி எழுப்பட்டது.