Pandian Stores 2: மக்கள் மத்தியில் சீரியல் மிகவும் பிரபலமாகிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் டிவியில் அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்த சீரியல் என்றால் அது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்தான். அதன் முதல் பாகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதன் இரண்டாம் பாகமும் இப்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
சமீபத்தில் சரவணன் – தங்கமயில் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. ஆனால் பாண்டியன் எதிர்பார்த்ததை போல தங்கமயில் குடும்பம் இல்லை. தங்க மயில் குடும்பம் அடாவடி பண்ணும் குடும்பமாகவும் தன் மகளுக்கு பொய்யாக பேசி சரவணனை கட்டி வைக்க நினைப்பதாகவும் கதைகளம் சென்று கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: எலுமிச்சை நிற இடுப்புதான் ஹைலைட்!.. ஜோ பட நடிகையின் அழகில் ஏங்கும் இளசுகள்!…
அதனால் சரவணன் – தங்கமயில் திருமணத்திற்கு முன்னாடி தங்கமயிலின் உண்மை முகம் வெளிவருமா இல்லையா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து ரிகானா திடீரென விலகியிருக்கிறார். கதைப்படி ராஜியின் சித்தி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர்தான் இந்த ரிகானா. இவருக்கு பதிலாக இப்போது மாதவி நடித்து வருகிறார்.
ஏற்கனவே மாதவி சன் டிவியில் ஒளிபரப்பான இனியா தொடரில் நடித்து பிரபலமானவர். ரிகானா பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து விலகியதற்கான காரணத்தை ரிகானாவே ஒரு வீடியோ மூலம் வெளியிட்டிருக்கிறார். அதாவது ரிகானாவுக்கு காலில் ஏதோ வலி ஏற்பட்டதாம். கொஞ்சம் கூட நிற்க கூட முடியாத சூழ் நிலையில்தான் தற்போது ரிகானா இருக்கிறாராம்.
இதையும் படிங்க: நினைச்சது ஒன்னு.. நடந்தது ஒன்னு!.. விஜய் ஆண்டனி புலம்பறதுக்கு இதுதான் காரணமாம்!…
அதனால் ஒரு இரண்டு மாத காலம் பிரேக் தேவைப்படுகிறதாம் ரிகானாவுக்கு. அதனாலேயே இந்த சீரியலில் இருந்து விலக வேண்டிய சூழ் நிலை ஏற்பட்டதாக அந்த வீடியோவில் சொல்லியிருக்கிறார்.
