கட்சிக் கொடி அறிமுக விழாவில் குடும்பத்தை அழைக்காத விஜய்! இதுதான் காரணமா?
Vijay:பல தினங்களுக்கு முன்பு விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்திய செய்தி சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. கட்சிக்கொடி அறிமுகப்படுத்தியதில் இருந்து பல விமர்சனங்களையும் சந்தித்து வருகிறார் விஜய். இன்று பல்வேறு மாவட்டங்களில் தனது கட்சி கொடியை அனுமதி இல்லாமல் பறக்க விடக்கூடாது என்றும் தனது தொண்டர்களுக்கு அறிக்கை விட்டிருக்கிறார் விஜய் .
அதனால் அனுமதியோடு ஒரு சில மாவட்டங்களில் அவர்களுடைய கட்சிக்கொடி இன்று வெற்றிகரமாக பறந்து கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் பிரபல மூத்த தயாரிப்பாளர் சேகுவாரா விஜயை பற்றி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறா.ர் சேகுவாராவிடம் ‘ஏன் இந்த விழாவிற்கு அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளை விஜய் அழைத்து வரவில்லை ’என்ற ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
இதையும் படிங்க: மூணு பாட்டும் புஸ்ஸுனு போச்சி!.. நாலாவது சிங்கிளாவது தேறுமா?!.. கோட் பட புது அப்டேட்!..
அதற்கு பதில் அளித்த சேகுவாரா ‘குடும்ப அரசியலாக மாறிவிடக்கூடாது என்பதற்காகத்தான் தனது குடும்பத்தை அவர் அழைத்து வரவில்லை. மற்றபடி அவர்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடும் கிடையாது. அவருடைய மகன் சஞ்சய் தமிழ்நாடு வெற்றியை கழகம் என்ற பெயரை ஆங்கிலத்தில் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
தந்தைக்கும் தாய்க்கும் கருத்து வேறுபாடு இருக்கும் பட்சத்தில் ஒரு மகன் தாய்க்கு ஆதரவாக தான் இருப்பார், ஆனால் சஞ்சய் தனது அப்பாவின் கட்சியின் பெயரை ஆங்கிலத்தில் வெளியிட்டிருப்பதிலிருந்து உங்களுக்கு தெரியவில்லையா? அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இல்லை என்று’ என சேகுவாரா கூறி இருக்கிறார். மேலும் கட்சி கொடி பாடலில் எது எது எப்படி வர வேண்டும்? எந்த வரிகள் இடம் பெறக் கூடாது என்பதிலும் அவருடைய மனைவி சங்கீதாவின் பங்கு இருக்கிறது என சேகுவாரா கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: ஒவ்வொரு பிறந்தநாளின் போது விஜயகாந்த் போகும் முதல் இடம்! தயாரிப்பாளர் பகிர்ந்த தகவல்
மேலும் கொடி டிசைன் பண்ணுவதில் அவருடைய தாயின் பங்கும் இருப்பதாக சேகுவாரா கூறி இருக்கிறார். விஜய் பற்றி இப்படி விமர்சனம் செய்வதற்கு நான் ஒரே ஒரு கேள்வி கேட்கிறேன். இப்போதைய அரசியல்வாதிகளாக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி எந்த ஒரு விழாவிற்காவது அவருடைய மனைவியை அழைத்து வந்திருக்கிறாரா? அண்ணாமலை அவருடைய மனைவியை அழைத்து வந்திருக்கிறாரா?
ஏன் நமது முதலமைச்சர் ஸ்டாலின் கூட அவருடைய கட்சி விழாவிற்கு அவருடைய குடும்பத்தை அழைத்து வந்திருக்கிறாரா? அப்படி இருக்க ஏன் விஜயை மட்டும் இந்த அளவு விமர்சிக்கிறீர்கள் என்று கேட்கிறார் சேகுவாரா. மேலும் அவரிடம் ‘லியோ படத்திலிருந்து விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. அதிலும் திரிஷாவுடன் முத்தக்காட்சியில் நடித்ததில் இருந்து இந்த ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. அது உண்மையா?’ என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.
இதையும் படிங்க: அந்த விஜய் படம் பார்த்துட்டு அப்படி அழுதேன்!.. மாரி செல்வராஜ் இயக்குனராக மாறிய தருணம்!..
இதற்கும் பதிலளித்த சேகுவாரா முத்தக்காட்சி இப்போது என்று இல்லை. சங்கவி காலத்திலிருந்து முத்த காட்சியில் நடித்து தான் வருகிறார் விஜய். இதையெல்லாம் தெரிந்து தானே சங்கீதா திருமணம் செய்திருப்பார். அதையும் மீறி சங்கீதா பிரபாகரன் வளர்ப்பில் இருந்து வந்தவர். அவருக்கு இதெல்லாம் ஒரு சாதாரண விஷயம். அந்த அளவுக்கு தைரியம் இல்லாமல் இல்லை. அதனால் அவர்களுக்குள் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை என கூறி இருக்கிறார் சேகுவாரா.