Actor Prabhas: தென்னிந்திய சினிமாவில் நடிகர் பிரபாஸ் ஒரு மிகச்சிறந்த நடிகராக இருந்து வருகிறார். தெலுங்கில் நம்பர் ஒன் நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் பிரபாஸ். முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஈஸ்வர் என்ற படத்தின் மூலம் அறிமுகமான பிரபாஸ் அதற்கு அடுத்தபடியாக வெளியான வர்ஷம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அவர் ஒரு முழு ஆக்க்ஷன் ஹீரோவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார்.
கிட்டத்தட்ட இந்த சினிமாவிற்கு வந்து 17 ஆண்டுகள் ஆன நிலையில் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ஆக்சன் படங்களாகவே அமைந்திருக்கின்றன. அதனால் பிரபாஸை ரசிகர்கள் ஒரு ஆக்சன் ஹீரோவாகவே பார்க்க விரும்புகின்றனர். அது மட்டும் அல்லாமல் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு அவர் மிகப்பெரிய அந்தஸ்தை பெற்ற நடிகராக மாறி இருக்கிறார்.
இதையும் படிங்க: கமலுக்கு திருப்தி இல்லையா இந்தியன் 2 மியூசிக்…? என்ன செய்யப் போகிறார் அனிருத்?
அதனால் ஆக்சன் படங்களை தவிர்த்து மற்ற ஒரு சாதாரண கதைக்களம் கொண்ட படங்களில் அவர் நடித்தால் கண்டிப்பாக மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். ரொமான்டிக் குடும்ப பங்கான படம் என இந்த மாதிரி கதைகளில் அவர் நடிக்கவும் முடியாது. அந்த அளவுக்கு தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக நிலை நிறுத்தி இருக்கிறார்.
பிரபாஸ் சமீபத்தில் அவர் நடித்த கல்கி திரைப்படத்தின் டிரைலர் வெளியானது. கிட்டத்தட்ட ஹாலிவுட் தரத்தில் அந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் எப்போது திரையில் பார்க்க போகிறோம் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபாஸின் திருமணம் குறித்து பிரபல இயக்குனர் ராஜமவுலி சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார்.
இதையும் படிங்க: கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகள்!. கட்டியணைத்து கண்ணீர் விட்ட நடிகர் திலகம்!…
கிட்டத்தட்ட 40 வயதை நெருங்கி இருக்கும் பிரபாஸ் இன்னமும் திருமணம் செய்து கொள்ளாமல் இந்த சினிமாவில் ஒரு முரட்டு சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கின்றார். பாகுபலி படத்திற்குப் பிறகு இவருக்கும் அனுஷ்காவுக்கும் இடையே காதல் இருந்ததாகவும் அதன் பிறகு இருவருக்கும் பிரேக்கப் ஆகிவிட்டதாகவும் ஒரு தகவல் கூறப்பட்டது.
ஆனால் பிரபாஸ் திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் அவருடைய சோம்பேறித்தனம் தான் என ராஜமவுலி கூறி இருக்கிறார். அவர் அடிப்படையில் ஒரு முழு சோம்பேறி. திருமணம் செய்யாததற்கும் அவருடைய சோம்பேறித்தனம் தான் காரணமாகும். ஒரு பெண்ணை பார்த்து தன் பெற்றோரிடம் சொல்லி திருமணம் செய்ய அதிக வேலையாக இருக்கும். அதனால் இதை கண்டிப்பாக செய்ய வேண்டுமா? என்ற அந்த சோம்பேறித்தனம் தான் பிரபாஸை இன்றுவரை திருமணம் செய்து கொள்ளாமல் தடுத்து வருகிறது என ராஜமவுலி கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க: அவன ஒன்னுமே பண்ண முடியாதுய்யா!.. இளையராஜா பாட்டை கேட்டு எமோஷனால் ஆன வைரமுத்து!…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…
Cook with Comali 7: பிரபல விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியான குக் வித் கோமாளியில் இனி ஆங்கராக ரக்ஷனுக்கு பதில்…
உலகம் முழுவது சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படம் தி மம்மி. ஆக்ஷன், த்ரில்லர் மற்றும் ஃபேண்டஸி என அனைத்தும் கலந்து…
இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் ஒரே மகன் விஜய்.. ஆசை மகன்.. மகளும் சிறு வயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதால் மகன் விஜயை…
பரத் நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற காளிதாஸ் படத்தின் இரண்டாம் பாகம் இன்று வெளியாகிறது.…