ஏன் பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில்லை? அஜித்தே சொன்ன காரணம்
Actor Ajith:தமிழ் சினிமாவில் ஒரு உச்சம் தொட்ட நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித். தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவான விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்போடு காத்துக் கொண்டிருக்கின்றது. விடாமுயற்சி படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டியிருக்கிறது.
அந்த பாடல் கட்சியை படமாக்கி முடித்தவுடன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளை ஆரம்பித்து விடுவார்கள். அது எல்லாம் முடிந்து படம் ரிலீசுக்கு தயாராகும். ஆனால் எப்போது ரிலீஸ் என்பது தான் இப்போது ஒரே குழப்பத்தில் இருக்கிறது படுக்குழு.
இதையும் படிங்க: எனக்கே மார்க்கெட் இல்ல!.. ஆனா அவர வச்சி படமெடுத்தேன்!.. ஓப்பனாக சொன்ன கமல்…
அக்டோபர் 31ஆம் தேதி வர வேண்டிய விடாமுயற்சி இப்போது அடுத்த வருடம் பொங்கல் அன்றுதான் வெளியாகும் என்றும் கோடம்பாக்கத்தில் ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த நிலையில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அடுத்ததாக குட் பேட் அக்லி திரைப்படத்தில் மும்முரமாக படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார் அஜித் .
அஜித்தை பொருத்தவரைக்கும் மற்ற நடிகர்களைப் போல சகஜமாக பொது இடங்களுக்கு அவர் வருவதே கிடையாது. ரசிகர்களுடன் உரையாடுவதும் கிடையாது. ரசிகர் மன்றமே கிடையாது. அவர் ஏன் பொது நிகழ்ச்சிக்கு வருவதில்லை என்பதற்கான ஒரு காரணம் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இதையும் படிங்க: விஜய் கூட நான் நடிக்க மாட்டேன்!.. முரண்டு பிடித்த ஷகிலா!.. தளபதி என்ன பண்ணார் தெரியுமா?!….
பிரபல மூத்த பத்திரிகையாளரான மெய் பா நாராயணன் அஜித்தை பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார். இவர் அஜித்துடன் இணைந்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் வக்கீல் கேரக்டரில் நடித்திருப்பார். அந்த படப்பிடிப்பின் போது அஜித்திடம் மெய் பா நாராயணன் ‘ஏன் சார் எந்த நிகழ்ச்சியிலும் கலந்துக்க மாட்டிறிங்கனு’ கேட்டாராம் .
அதற்கு அஜித் ‘எல்லாரும் சந்தோஷமா இருக்கணும் .எல்லாரும் அப்பா அம்மாவை நேசிக்கணும். எனக்கு பின்னாடி வரத விட எல்லாரும் அவங்க அப்பா அம்மா பின்னாடி வரணும். எல்லாரும் நல்லா இருக்கணும். அத நாம மாத்திட கூடாதுன்னு ரசிகர் மன்றத்தையும் கலச்சிட்டேனு’ சொன்னாராம் அஜித். இப்படிப்பட்ட ஒரு நல்ல மனுஷன் இந்த தமிழ் சினிமாவில் இருக்கிறார் என்பதை பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது என்று மெய் பா நாராயணன் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க: பிரியங்காவை காப்பாத்த என்னெல்லாம் பண்றாங்க? ஒரு வேளை செட்டப்பா ?