இளையராஜா தில்லா சன் பிக்சர்ஸ் மேல வழக்கு போட இதுதான் காரணமாம்..! பயில்வான் போட்ட குண்டு
இளையராஜா, வைரமுத்து பிரச்சனை பற்றியும், சன்பிக்சர்ஸ் மீது இளையராஜா போட்ட வழக்கு பற்றியும் பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இளையராஜாவுக்கும் படங்கள் இல்லை. வைரமுத்துவும் இப்போ பாட்டு எழுதுறது இல்லை. ரெண்டு பேரும் சும்மா இருக்குறதால சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டிங்கற மாதிரி சண்டை இழுத்துக்கிட்டு இருக்காங்க. இசையை விட மொழி தான் உயர்ந்தது என்கிறார் வைரமுத்து. சினிமாவுல மெட்டுக்குத் தான் பாட்டு எழுதுறாரு. புத்தி வேண்டாமா அவருக்கு. சினிமாவுக்கு கவிப்பேரரசு தேவையில்லை.
இதையும் படிங்க... அரண்மனை 4 கல்லா கட்டுச்சா?.. காணாமல் போச்சா?.. முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?..
பாடல் ஆசிரியர் போதும். பாரதிராஜா தான் வைரமுத்து நல்லா பாட்டு எழுதுவாருன்னு சொல்லி வாய்ப்பு கொடுக்கச் சொன்னாரு. அப்போ பொன்மாலைப் பொழுதுன்னு பாட்டு எழுதுறாரு வைரமுத்து. இளையராஜா இந்தப் பாட்டு நல்லா இல்லன்னு சொல்லியிருந்தா வைரமுத்துவோட கதி என்னாயிருக்கும்?
அதே கவர்மெண்ட்ல மொழி பெயர்ப்புத் துறையில ஒரு கிளார்க்கா இருந்துருப்பாரு. அவ்வளவு தானே, அப்படின்னா இளையராஜா மனசு வச்சதால தானே அவரால வர முடிஞ்சது. மொழி தெரியலன்னாலும் நாம இசையை ரசிப்போம்.
சினிமா பாடல்களுக்கு இசை தான் முதல்ல முக்கியம். இளையராஜாவோட இசை இல்லாம வெறும் வைரமுத்துவோட பாட்டு மட்டும் இருந்தா யாராவது ரசிப்பாங்களா..? புரிய வேண்டாமா?
இதையும் படிங்க... நான் சொல்ற கதைலதான் கமல் நடிக்கணும்.. அடம்பிடிக்கும் லிங்குசாமி.. அடுத்து நடப்பது என்ன?..
இளையராஜாவுக்கும், வைரமுத்துவுக்கும் ஏழாம் பொருத்தம். இளையராஜாவும், பாரதிராஜாவும் பால்ய நண்பர்கள். இளையராஜாவின் எந்த விழாவிலும் வைரமுத்து கலந்து கொள்ளவில்லை. இளையராஜா தற்போது கூலி படத்துக்காகப் போட்ட காப்புரிமை வழக்கில் என்ன தப்பு இருக்கு? வைரமுத்து இளையராஜாவைப் பற்றி பேசியது அவரது கவிப்பேரரசு பட்டத்திற்கு அழகல்ல.
சன் பிக்சர்ஸ் மேல அதுவும் ஆளும்கட்சி மேல ஒரு கேஸ் போட்டுருக்காருன்னா அதுக்கு திரானி வேணும். அதுவும் தில்லா அவரு கேஸ் போட்டுருக்காருன்னா அதுக்குக் காரணம் அவர் இசைஞானி என்பதோடு மட்டுமல்ல. பாஜக.வோட எம்.பி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.