More
Categories: Cinema History Cinema News latest news

ஷங்கர் பிரம்மாண்ட இயக்குனராக இதுதான் காரணமாம்… யாருமே கேள்விப்படாத தகவலா இருக்கே..!

பிரம்மாண்ட இயக்குனர் என்றதும் நமக்கு உடனே நினைவுக்கு வருவது டைரக்டர் ஷங்கர் தான். இவர் எப்படி இந்த நிலைக்கு வந்தார் என்று பார்ப்போமா…

சூரியன் படத்தின் இயக்குனர் பவித்ரன். இவரோட  அசோசியேட் டைரக்டர் தான் ஷங்கரும், ஏ.வெங்கடேஷூம். அந்த நேரத்துல பவித்ரன் கே.டி.குஞ்சுமோன் படத்தை இயக்குவதற்கு ஒத்துக்கொள்கிறார். அவருக்குப் பல படத்தயாரிப்பாளர்கள் வெயிட் பண்றாங்க.

Advertising
Advertising

கே.டி.குஞ்சுமோனுக்கு சரத்குமாரை வைத்துப் படம் பண்றதுக்கு ஓகே சொல்கிறார் பவித்ரன். அந்த நேரம் நடிகர் விஷாலோட அப்பா ஜி.கே.ரெட்டி படம் பண்ண அழைத்ததாகவும் அங்கு சென்று படம் இயக்கினாராம். அது தான் ஐ லவ் இண்டியா. சரத்குமார் படம் தான். அது பிளாப் ஆயிடுச்சு.

GM

இது கே.டி.குஞ்சுமோனுக்கு ரொம்பவே கோபத்தை வரவழைக்க பவித்ரனுக்கு எதிரா பிரம்மாண்டமாக ஒரு படம் எடுக்க வேண்டும் எனவும் அதற்குப் புதுமுக இயக்குனரைப் போடலாம் என்றும் முடிவு செய்கிறார். அந்த வாய்ப்பு ஏ.வெங்கடேஷ்க்கு வர, அவர் ஷங்கரிடம் சொல்கிறார். முதல்ல ஆர்ட் பிலிம் மாதிரி சாதாரண லவ் ஸ்டோரியை சொல்லி இருக்கிறார்.

உடனே நான் பிரம்மாண்டமா எடுக்கணும்னு இருக்கேன். ‘என்னப்பா நீ சாதாரண கதையை சொல்றேன்னு சொல்லி நல்ல பிரம்மாண்டமான கதையா எழுதிட்டு வா.. எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை..’ன்னு ரமணா படத்துல சொன்ன மாதிரி சொன்னாராம். அந்த ஒரு வார்த்தை தான் அவரை பிரம்மாண்ட இயக்குனராக்கியது.

அவர் உடனே காந்தி கிருஷ்ணா, ஏ.வெங்கடேஷ் எல்லாரையும் அழைத்து நடேசன் பார்க்கில் போய் ஜென்டில்மேன் கதையை உருவாக்கினார். அதை கே.டி.குஞ்சுமோனிடம் சொல்ல அவரும் ஓகே சொல்லிவிட்டாராம். அப்படித்தான் முதல் படத்திலேயே பிரம்மாண்டத்தைக் காட்டி அசர வைத்து விட்டார் ஷங்கர்.

இதையும் படிங்க… ஜாதியை பேசிய இயக்குனர்! கடுப்பான விஜய்சேதுபதி.. என்ன செய்தார் தெரியுமா?

அதுவும் இட ஒதுக்கீடு என்ற ஒரு சமூகத்திற்குத் தேவையான கருத்தை முன்வைத்து எடுத்தது பரவலான பாராட்டுகளைப் பெற்றது. மேற்கண்ட தகவலை பிரபல சினிமா விமர்சகர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

Published by
sankaran v

Recent Posts