More
Categories: Cinema History Cinema News latest news

பாக்கியராஜ் படத்தில் சிவாஜி நடிக்க இதுதான் காரணமாம்..! மனுஷனுக்கு எவ்ளோ பெரிய மனுசு..!

தமிழ்த்திரை உலகில் சிவாஜியை நடிகர் திலகம் என்று கொண்டாடி வருகின்றனர். அவரது சாயல் இல்லாமல் எந்த நடிகராலும் நடிக்க முடியாது. அந்த அளவுக்கு அவர் தொடாத கதாபாத்திரங்களே இல்லை எனலாம். ஏதாவது சிக்கலான காட்சிகளோ, உணர்ச்சிகளையோ வெளிப்படுத்த வேண்டும் என்றால் பழைய சிவாஜி படங்களைப் போட்டுப் பார்ப்பார்களாம்.

இந்தக் காட்சிக்கு நடிகர் திலகம் எப்படி நடித்துள்ளார்? உணர்ச்சிகளையும் முகபாவங்களையும் எப்படி வெளிப்படுத்துகிறார் என்று பல நடிகர்களும் பார்த்து விட்டு அதன்பிறகு அந்த நடிப்புடன் தனது தனித்திறமையையும் சேர்த்து அந்தக் காட்சியில் சிறப்பாக நடித்து விடுவார்களாம்.

Advertising
Advertising

இதையும் படிங்க… ராமராஜன் சந்தித்த கார் விபத்து!. மருத்துவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!.. தெரியாம போச்சே!…

அந்த வகையில் தமிழ் சினிமா உலகின் அகராதி என்றே சிவாஜியை அனைவரும் சொல்வர். இவருடன் நடிக்க அனைத்து நடிகர்களுமே ஆர்வம் காட்டுவர். அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், விஜயகாந்த், பிரபு என பல நடிகர்களும் சிவாஜியுடன் இணைந்து நடித்து விட்டனர். தாய்க்குலங்களின் பேராதரவு பெற்ற நடிகரான பாக்கியராஜிக்கும் இந்த ஆசை நீண்ட நாள்களாக மனதில் இருந்ததாம்.

எப்படியாவது ஒரு படத்தில் சிவாஜியுடன் இணைந்து பணியாற்றி விட வேண்டும் என்பது தான். அதனால் ஒரு கதையை உருவாக்கி அதில் சிவாஜிக்கு என ஒரு கதாபாத்திரத்தைக் கொண்டு வந்தாராம். சிவாஜியிடம் இதுபற்றிக் கேட்கவும் அவர் உடனே ஒப்புக்கொண்டாராம். இதுபற்றி பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாம்.

Dhavani Kanavugal

தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜியின் நடிப்புத் திறனுக்கு முழு தீனி போட்ட பாத்திரமாக இல்லை. தாவணிக்கனவுகள் படத்தில் சிவாஜி நடிக்க ஒப்புக்கொண்டார் என்றால் அதற்கு காரணம் பாக்கியராஜ் மீது இருந்த தனிப்பட்ட அன்பு.அதே போல பாக்கியராஜ் சிவாஜியை இந்தப் படத்திற்கு ஒப்பந்தம் செய்தார் என்றால் ஏதாவது ஒரு படத்திலாவது சிவாஜியோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற தணியாத ஆசை தான் காரணம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

1984ல் பாக்கியராஜ் நடித்து இயக்கிய படம் தாவணிக்கனவுகள். இவருடன் இணைந்து சிவாஜிகணேசன், ராதிகா, இளவரசி, பார்த்திபன், ராதா, மயில்சாமி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் பாரதிராஜாவும், சித்ரா லட்சுமணனும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். பாரதிராஜாவின் உதவி இயக்குனராக சித்ரா லட்சுமணன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க… நண்பர் பெயரில் பல கோடி சொத்து!.. விஜயகாந்த் செய்த தரமான சம்பவம்!.. அவ்வளவு நம்பிக்கையா?!..

படத்தில் மிலிட்டரி ரிட்டையர்டு மேன் கேப்டன் சிதம்பரம் கேரக்டரில் சிவாஜி நடித்து இருப்பார். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் மீது தணியாத வேட்கை கொண்ட கேரக்டரில் பின்னிப் பெடல் எடுத்து இருப்பார் சிவாஜி. 5 தங்கைகளின் திருமணத்தை முடித்து வைக்க போராடும் கேரக்டரில் பாக்கியராஜ் நடித்து தனக்கே உரிய முத்திரையைப் பதித்திருப்பார். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் பிரமாதம்.

Published by
ராம் சுதன்