நடிகர் எம்எஸ் பாஸ்கர், தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு நடிகராக வலம் வருபவர். காமெடி நடிகராக முதலில் படங்களில் நடித்தவர், பின்பு குணச்சித்திர நடிகராக பல படங்களில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தினார்.
பட்டாபியாக பிரபலம்
முதலில் டிவி சேனல் ஒன்றில் சின்ன பாப்பா பெரிய பாப்பா என்ற காமெடி சீரியலில் நடித்துதான் எம்எஸ் பாஸ்கர் பிரபலமானார். காது கேட்காதவராக பட்டாபி என்ற இவரது கேரக்டர் மிகவும் ரசிக்கும்படி இருந்தது. இன்னும் கூட சிலர் இவரை பட்டாபி என்றே அழைப்பதும் உண்டு.
டப்பிங் கலைஞர்
அதுமட்டுமின்றி எம் எஸ் பாஸ்கர் ஒரு டப்பிங் கலைஞர். பல படங்களில், பின்னணி குரல் பேசி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூது கவ்வும் அறை எண் 302ல் கடவுள் மொழி எட்டு தோட்டாக்கள் காற்றின் மொழி உள்ளிட்ட படங்களி்ல் மிகச்சிறந்த குணச்சித்திர நடிப்பை தந்திருப்பார் எம்எஸ் பாஸ்கர். தன்னுடன் நடித்த சில பிரபல நடிகர்களை பற்றி எம்எஸ் பாஸ்கர் பேசி இருக்கிறார்.
அஜீத்குமாரின் பெருந்தன்மை
அதில், கிரீடம் படத்தில் நடிப்பதற்காக அஜித் வந்திருந்தார். அவருக்கான காட்சி இரவில்தான் எடுக்கப்படும் என்றாலும், பகல் முழுக்க எங்களிடம் பேசிக்கொண்டு இருந்தார். அவருக்கு முதுகு வலி இருந்ததால், உட்கார முடியாது. அதனால், அண்ணே, நீங்க உட்காருங்க என என்னையும், இன்னொரு ஆர்ட்டிஸ்ட்டையும் உட்கார வைத்துவிட்டு, அவர் மணிக்கணக்கில் நின்றபடி பேசினார். 9 மணி நேரம் எங்ககிட்ட நின்னுகிட்டே பேசினார். அவ்வளவு தன்மையான மனிதர்.
இவர் என்ன பேச வேண்டும்?
நடிகர் விஜய், பேச மாட்டார் என்கின்றனர். என்ன பேச வேண்டும் என கேட்கிறேன். என்னை போன்றவர்களை பார்த்தால், வாங்க அண்ணா நல்லா இருக்கறீங்களா சாப்பிட்டீங்களா என விசாரிக்கிறார். உட்கார வைத்து பேசுகிறார். மற்றபடி அவர் வேலையில் அவர் சரியாக இருக்கிறார். நிறைய பேசினால், தலை மேல ஏறிக்கொள்வார்கள். இது பொதுவான விஷயம்தான். அதனால்தான் அவர் யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை. பேசினால், அடுத்த படத்தில் எனக்கு ஒரு கேரக்டர் வாங்கி கொடுங்க என்பார்கள். உடனே அதற்கு சரி என்று பொய் சொல்ல வேண்டும். இதையெல்லாம் தவிர்க்க தான் விஜய் போன்றவர்கள், யாரிடமும் அதிகமாக பேசுவதில்லை, என்று கூறி இருக்கிறார் எம்எஸ் பாஸ்கர்.
'ஒண்ணே ஒண்ணு…
டைட்டிலைப் பார்த்ததுமே…
Kollywood: கோலிவுட்டை…
தனுஷ் இயக்கத்தில்…
Sivakarthikeyan: விஜய்…