பிசாசு 2 படம் இன்னும் ரிலீஸாகாம இருக்குறதுக்கு இதுதான் காரணமாம்..! அப்படின்னா படம் வரவே வராதா..?

by ராம் சுதன் |   ( Updated:2024-06-17 04:23:40  )
Pisasu 2
X

Pisasu 2

தற்போது விஜய் சேதுபதி நடித்த மகாராஜா படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வருகிறது. மிஸ்கின் தற்போது விஜய் சேதுபதியை வைத்து டிரெய்ன் படத்தை இயக்கி வருகிறார். அப்படி இருக்க இவர்கள் இணைந்த பிசாசு 2 படம் மட்டும் இன்னும் ரிலீஸாகாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி பலருக்கும் எழுகிறது. இதற்கு பிரபல வலைப்பேச்சாளர் பிஸ்மி என்ன சொல்கிறார் என்று பார்ப்போமா...

பிசாசு 2 படம் முடிவடைந்து வருடக்கணக்காகிறது. அந்தப் படத்தோட சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் வந்து இன்னும் விற்கல. பல நிறுவனங்களுக்கு முயற்சி பண்ணியும் எதுவும் நடக்கவில்லையாம்.

இதையும் படிங்க... தடாலடியாக சம்பளத்தை உயர்த்திய விஜய் சேதுபதி… இந்த நிலைமைல இதெல்லாம் சரியா? பிரபலம் கேள்வி

இதற்கிடையில் இப்போது சேட்டிலைட், டிஜிட்டல் வியாபாரமே ஸ்தம்பித்து போனது. அதனால அந்த வியாபாரத்தை முடிக்காம படத்தை ரிலீஸ் பண்ணக்கூடாதுன்னு தயாரிப்பாளர் தெளிவா இருக்காங்க. என்ன காரணம்னா ஒரு படத்தினுடைய வியாபாரத்தில் கணிசமான தொகை இந்த ரெண்டு ரைட்ஸ்னால தான் வரும்.

நீங்க ரிலீஸ் பண்ணிட்டு வித்துறலாம்னு நினைச்சீங்கன்னா அதுல மிகப்பெரிய ரிஸ்க் இருக்கு. ஒருவேளை படம் பெரிய அளவுல ஹிட்டாயிடுச்சுன்னா அடுத்த நாளே இதை வந்து வாங்கிட்டுப் போயிடுவாங்க. ஒரு வேளை படம் ஆவரேஜ், பிலோ ஆவரேஜ்னு ரிப்போர்ட் வந்துட்டுன்னா இந்த ரெண்டு ரைட்ஸையும் கடைசி வரைக்கும் விற்கவே முடியாது.

அப்படி ஒரு ஆபத்து இருக்கறதனால அந்தத் தயாரிப்பாளர் ரிஸ்க் எடுக்கத் தயாரா இல்லை. இது பிசாசு 2க்கு மட்டுமல்ல. நிறைய படங்கள் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தேதியை நெருங்கியும் அதைத் தள்ளி வைத்ததற்கான காரணம் இதுதான்.

மிஷ்கின், விஜய்சேதுபதியின் காம்போ தான் இந்த நிலைமைக்குக் காரணம். மிஷ்கின் படம் கமர்ஷியலா இருக்காது. விஜய் சேதுபதி தொடர்ந்து மொக்கைப் படங்களா கொடுத்துக்கிட்டு இருக்காரு. இவர்கள் 2 பேரும் சேர்ந்த படம் எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக பிசாசு 2 ஹாரர் சப்ஜெக்ட். இதெல்லாம் தான் படத்தோட சேட்டிலைட், டிஜிட்டல் ரைட்ஸ் வியாபாரம் ஆகாம இருக்கக் காரணம்னு நான் நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க... நான் எப்படி அவர் கூட நடிக்கிறது?!.. பயந்த நடிகை!.. அஜித் செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!..

பிசாசு 2 படத்துக்கு கார்த்திக் ராஜா இசை அமைத்துள்ளார். ஆண்ட்ரியா இந்தப் படத்தில் கொடூரமான பேயாக வலம் வருகிறார். விஜய் சேதுபதி தான் ஹீரோ. பிசாசு முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து மிஸ்கின் 2ம் பாகத்தையும் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story