Connect with us
kanth

Cinema News

விஜயகாந்த் சீன் சொதப்பல்! அதற்கான காரணத்தை கூறிய கோட் ஒளிப்பதிவாளர்

Vijayakanth: விஜயகாந்த் ஏஐயை எத்தனையோ திரைப்படங்களில் பயன்படுத்த பல தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் முயற்சி செய்தனர். ஏன் விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் திரைப்படத்திலும் பயன்படுத்த நினைத்தார்கள். ஆனால் பிரேமலதா விஜயகாந்த் தன் கணவரை ஏஐ மூலம் காட்ட வேண்டும் என்றால் பெரிய பட்ஜெட் உள்ள படங்களில்தான் காட்ட வேண்டும் என மறுத்து வந்தார்.

கோட் திரைப்படத்திலும் எவ்வளவோ முறை வெங்கட் பிரபு பிரேமலதாவிடம் கேட்டும் அதற்கான பதிலை சொல்லாமல்தான் இருந்தார் பிரேமலதா விஜயகாந்த். எப்படியோ ஒருவழியாக கோட் படத்தில் விஜயகாந்த் ஏஐ பயன்படுத்தப்பட்டது.இதுவே கோட் படத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.

இதையும் படிங்க: விஜயின் கொள்கை பரப்பு செயலாளரே திரிஷாதான்! ‘கோட்’ படத்துல இத கவனீச்சீங்களா?

விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அவரை ஏராளமான ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர். அதனால் விஜயகாந்த் ரசிகர்களும் கோட் படத்திற்கு கூட்டம் கூட்டமாக வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததை போலவே கோட் படத்தில் முதல் சீனில் விஜயகாந்தை பார்த்ததும் பல பேர் எமோஷன் ஆனார்கள்.

ஒரு சில பேர் கத்தி கூச்சலிட்டனர். ஏனெனில் அவர் இறந்த பிறகு ஏஐ மூலமாக நடிக்கும் படம் கோட். அதனால் அந்த எதிர்பார்ப்பே பெரிய அளவில் இருக்கும். ஆனால் படத்தில் விஜயகாந்தை பார்த்ததும் இது விஜயகாந்தா என்று தான் யோசிக்க வைத்தது.

இதையும் படிங்க: மாஸ் மாஸ்… போட்றா வெடிய… தளபதி69க்கு சூப்பர்ஹிட் வில்லன்… நடந்தா நல்லா இருக்குமே!

நிஜமாகவே விஜய் விஜயகாந்தின் மாஸ்க்கை போட்டு நடித்த மாதிரி இருந்தது. சரிவர எடுபடவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இதற்கான காரணத்தை கோட் படத்தின் ஒளிப்பதிவாளரே சொல்லியிருக்கிறார்.

அதாவது ஜீவன் கேரக்டரில் நடிக்கும் விஜயின் முகம் அப்படியே மேட்ச் ஆகியிருந்தது. சிறு வயதில் எந்தவொரு வித்தியாசமும் தெரியவில்லை. ஆனால் அதே 17 வயது விஜயின் முகத்தை பாருங்க. கொஞ்சம் வித்தியாசம் இருக்கும். காரணம் ஜீவன் கேரக்டருக்கு இப்ப உள்ள விஜயின் முகத்தை வைத்து டெக்னாலஜி பயன்படுத்தி 2டியில் பயன்படுத்தினோம். அதனால் கச்சிதமாக வந்தது.

இதையும் படிங்க: டேக் ஆஃப் ஆகும் ‘சிம்பு 48’ திரைப்படம்! அதற்கு காரணமான நடிகர் யார் தெரியுமா?

இதே 17 வயது விஜயிக்கு விஜயின் பழைய புகைப்படத்தை வைத்துதான் அந்த டெக்னாலஜி பயன்படுத்த முடியும். அதனால் தான் அது ஒட்டவில்லை. இதே மாதிரிதான் விஜயகாந்துக்கும். அவருடைய பழைய புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மூலமாகத்தான் விஜயகாந்தின் முகத்தை எடுத்து இந்த டெக்னாலஜியின் அப்ளை செய்தோம். அதனால்தான் கொஞ்சம் மேட்ச் ஆகாமல் இருக்கும் என கூறினார்.

google news
Continue Reading

More in Cinema News

To Top