AA22 : இதெல்லாம் நம்புற மாறியா இருக்கு!.. அல்லு அர்ஜுனுக்கு இவ்வளவுதான் சம்பளமா?….

by சிவா |   ( Updated:2025-04-08 08:15:37  )
aa22
X

விஜயை வைத்து தெறி, மெர்சல், பிகில் போன்ற படங்களை இயக்கிவிட்டு அப்படியே பாலிவுட்டுக்கு போய் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி மாபெரும் ஹிட் கொடுத்தவர் அட்லி. ஷங்கரின் உதவியாளர் என்பதால் அவரை போலவே அதிக பட்ஜெட், அதிக நாட்கள் படப்பிடிப்பு என தயாரிப்பாளரை கதறவிடுவார். விஜய் படத்தை இயக்க துவங்கியதுமே தன்னை ஒரு மாஸ் இயக்குனராக நினைக்க துவங்கிவிட்டார்.

ஏற்கனவே தமிழில் வெளியான படங்களின் கதையை கொஞ்சம் மாற்றி பட்டி டிங்கரிங் செய்து படமாக எடுக்கிறார் என்கிற விமர்சனம் அட்லி மீது இருக்கிறது. ஆனால், அதற்கெல்லாம் அட்லி விளக்கம் கொடுப்பது இல்லை. ‘என்னை பற்றி பேசுபவர்கள் பேசட்டும். நான் வெற்றிகளை கொடுத்து மேலே போய்க்கொண்டிருப்பேன்’ என ஜவான் பட விழாவில் பேசினார் அட்லி.

ஜவான் படம் வெளியாகி ஒன்றரை வருங்கள் ஆகியும் அட்லியின் அடுத்த பட அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. சல்மான்கானை இயக்குகிறார்.. அதில் ரஜினி கெஸ்ட் ரோல் என்றெல்லாம் செய்திகள் வெளியானது. ஆனால், அது நடக்கவில்லை. இப்போது அட்லியின் இயக்கத்தில் புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு இன்று காலை வெளியானது. காஸ்ட்லி காரில் வந்து இறங்கும் அல்லு அர்ஜூனையும், அட்லியையும் கலாநிதி மாறன் வரவேற்க அங்கிருந்து ஃபிளைட் கிளம்பி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல் நகருக்கு போய் இறங்க, அங்கே இந்த படத்தில் வேலை செய்யும் ஹாலிவுட் கலைஞர்கள் இந்த படம் பற்றி பெருமையாக பேசும் வீடியோவையும் வெளியிட்டார்கள்.

இந்த படத்திற்காக அல்லு அர்ஜுன் 200 கோடியும், அட்லி 100 கோடியும் சம்பளமாக கேட்டார்கள். ஆனால், சன் பிக்சர்ஸ் அதை ஏற்கவில்லை என்றார்கள். அதன்பின் சம்பளத்தை குறைத்துவிட்டு அல்லு அர்ஜுனுக்கு லாபத்தில் 30 சதவீதம், அட்லிக்கு 50 கோடி சம்பளமும் லாபத்தில் 20 சதவீதமும் பேசப்பட்டிருப்பதாக சொன்னர்கள்.

சிலரோ அல்லு அர்ஜூன், அட்லி இருவருக்குமே தலா ரூ.110 கோடி சம்பளம் மட்டும்தான். லாபத்தில் பங்கெல்லாம் சன் பிக்சர்ஸில் கொடுக்கமாட்டார்கள் என்கிறார்கள். அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா 2 படம் 1700 கோடி வரை வசூல் செய்த நிலையில் 110 கோடி சம்பளத்திற்கு எப்படி அவர் சம்மதம் சொல்லி இருப்பார் என்கிற கேள்வியும் எழுகிறது. விஜய் 200 கோடி சம்பளத்தை தாண்டினார். அஜித்தோ 160 கோடி வாங்குகிறார். அப்படி இருக்க அல்லு அர்ஜூன் இவ்வளவு குறைவான சம்பளத்தில் நடிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். இந்த படத்தின் பட்ஜெட் 650 கோடி என சொல்லப்படுகிறது.

Next Story