Connect with us

Cinema History

இந்தியன் 2 படத்தின் விறுவிறுப்பான கதை இதுதாங்க…! கமல் ஒரு எனர்ஜி பேங்க்…! ஜெயமோகன் சொல்வதைக் கேளுங்க

நான் கடவுள், அங்காடித் தெரு, பாபநாசம், சர்கார், 2.0; ஆகிய படங்களுக்குத் திரைக்கதை எழுதியவர் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். ரப்பர், விஷ்ணுபுரம், பனிமனிதன், கன்னியாகுமரி, கொற்றவை, ஏழாம் உலகம், அனல் காற்று, இரவு, காடு, வெள்ளை யானை, கன்னி நிலம், ஏழாம் உலகம் உள்பட பல நாவல்களையும் எழுதியுள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்திற்கு வசனம் எழுதியவர். இந்தியன் 2 படத்துக்கு கதை எழுதியவர்களில் ஒருவர் ஜெயமோகன். இவருக்கும் உலகநாயகன் கமல்ஹாசனுக்கும் நெருங்கிய நட்பு உண்டு. கமலைப் பற்றி இவர் என்ன சொல்கிறார் என்று பார்க்கலாமா…

Jayamohan

நான் சின்னப் பையனா இருக்கும்போது அவர் மலையாளப்படங்களில் நடித்துக் கொண்டு இருந்தார். அப்பவே அவர் மேல பெரிய ஈடுபாடு உண்டு. நான் கற்பனை செய்த காதல்ல நீங்க தான் நடிச்சிருக்கீங்கன்னு அவருக்கிட்ட சொன்னேன். குறும்புத்தனமான, விடலைத்தனமான காதல்களில் அவர் ஈடுபடுவார்.

கொற்றவை எழுதிய காலத்தில் இருந்து என்னுடைய வாசகரா அவர் வந்துருக்காரு. அப்படித்தான் அறிமுகம். தமிழ்ல பல எழுத்தாளர்களுக்கு அவர் வாசகர் தான். அப்புறம் சினிமாவுக்குள்ள வர்றேன். இப்ப வரைக்கும் நட்பு ரீதியா இருக்கிறோம்.

சினிமாவுல அவரை 60 வயசு ரேஞ்ச்ல பார்க்கக்கூடாது. என்னோட ஏஜ் குரூப் தான். இருந்தாலும் அவரோட எனர்ஜி 15….20 வயசுக்குள்ள எனர்ஜியோடு தான் எப்பமும் இருப்பார்.

நான் வந்து இப்படி பண்ணனும்…அப்படி பண்ணனும்னு பயங்கரமான கற்பனைகளோடு இருப்பேன்.. என்னுடைய அடுத்தடுத்த திட்டங்களை அவரிடம் தான் சொல்வேன். எனக்கு நல்ல உற்சாகம் ஊட்டுவார்.

அவருடைய ஆர்வம் வந்து பயங்கரமான எனர்ஜிடிக்கா இருக்கும். எது சொன்னாலும் முடியாதுன்னு அவர் எதுவுமே சொல்ல மாட்டாரு. அந்த எனர்ஜி தான் அவரை இப்படி மாத்துனது. எதனால அவரை சுற்றி இவ்ளோ நண்பர்கள் இருந்துக்கிட்டே இருக்காங்கன்னா அவர் ஒரு எனர்ஜி பேங்க் மாதிரி.

நானே கொஞ்சம் டல்லா இருக்கேன்னா…அவரைப் போயி பார்த்துட்டு வருவோம்னு கிளம்பிடுவேன். நல்ல எனர்ஜியா பேசக்கூடியவர்.

Indian 2

இந்தியன் 2ல கமல் வந்து கிட்டத்தட்ட பட்டினியா கிடந்து நடிக்கிறாரு. ஏன்னா வாயில எது மென்று சாப்பிட்டாலும் புரொஸ்தடிக் மேக் அப் போயிடும். ஜூஸ் மட்டும் உறிஞ்சி உறிஞ்சிக் குடிக்கிறாரு. பாவம்…எனக்கே பாவமாக இருந்துச்சு.

இந்தியன் 1 ல உள்ள அதே ஃபீல் உள்ள படம் இந்தியன் 2. ஆனா அதோட கதை கொஞ்சம் பின்னாலே போகும். சுதந்திரத்திற்கு முன்னால ஒரு காலம் போகும் இல்லையா…அதுல தான் இந்தியன் 1 இருக்கு. அதுக்கும் முன்னாடி உள்ள காலத்துக்கு இந்தியன் 2 போகும். அதுக்கு அப்புறம் இந்தியன் தாத்தா காலத்துக்கு வரும்.

இந்தியன் தாத்தாவுக்கும் அவரோட மகனுக்கும் உள்ள ரிலேஷன்ஷிப். இதுல இந்தியன் தாத்தாவோட அப்பா வருவாரு.

google news
Continue Reading

More in Cinema History

To Top