காத்துவாக்குல ‘தளபதி - 68 ’கதை இதுதான்: ஆர்வக்கோளாறு இருக்கலாம்.. அதுக்கு இப்படியா?
தமிழ் சினிமாவில் ஒரு குறிப்பிடத்தக்க இயக்குனராக வலம் வருபவர் இயக்குனர் வெங்கட் பிரபு. அவர் எடுக்கும் பெரும்பாலான கதைகள் ஒரு என்டர்டெயின்மென்ட் ஜானராகவே இருக்கும். சென்னை 28 படத்தில் தொடங்கி கடைசியாக அவர் எடுத்த மாநாடு படம் வரைக்கும் சென்டிமென்ட் மற்றும் என்டர்டெயின்மென்ட் கலந்த படங்களாகவே வெளிவந்திருக்கின்றன.
இயக்குனராக மட்டுமல்லாமல் ஒரு நடிகராகவும் சினிமாவில் கலக்கியவர் வெங்கட் பிரபு. அவர் எடுத்த படங்களில் மிகவும் பேசப்பட்ட படங்களாக மங்காத்தா மற்றும் மாநாடு ஆகிய படங்கள் அமைந்தன. வசூலிலும் மிகப்பெரிய சாதனையை படைத்தது அந்த இரு படங்கள்.
சமீபத்தில் நாக சைதன்யாவை வைத்து கஸ்டடி என்ற படத்தை எடுத்தார்.அது ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான தளபதி 68 என்ற படத்தை வெங்கட் பிரபு இயக்குவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகி உள்ளது.
தளபதி 68 படத்தை அட்லி தான் இயக்குகிறார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஒரு புது டிவிஸ்டாக வெங்கட் பிரபு இந்த படத்திற்குள் நுழைந்திருக்கிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்ற வெங்கட் பிரபுவிடம் ரசிகர்கள் பல கேள்விகளை கேட்டனர். அதாவது நீங்கள் எப்பொழுது சீரியஸ் ஆன ஒரு படத்தை எடுப்பீர்கள் என கேட்டார்கள்.
அதற்கு பதில் அளித்த வெங்கட் பிரபு "சீரியஸான படம் எடுத்தால் ஓட மாட்டேங்குது அதனால் எண்டர்டெயின்மெண்டாவே எடுக்கலாம் என முடிவெடுத்து விட்டேன்" என கூறி இருக்கிறார். இதன் மூலம் தளபதி 68 படம் எப்படி இருக்கும் என்பதற்கான ஒரு ஹின்டை கொடுத்திருக்கிறார் வெங்கட் பிரபு. விஜயின் அடுத்த படம் கண்டிப்பாக நண்பன் படம் மாதிரி முழுக்க முழுக்க ஒரு காமெடி கலந்த என்டர்டெயின்மென்ட் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : கண்டிப்பா பெரிய நடிகன் ஆவ பாரு? – ராதிகா கணித்த அந்த நடிகர் யார் தெரியுமா?..